இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கர்நாடக மாநில அமைச்சரவை 2-ம் கட்டமாக விஸ்தரிப்பு: அணி மாறிய 10 பேருக்கு அமைச்சர் பதவி

2/6/2025 3:33:54 PM
விஜய்யை விசாரிக்கும் திட்டம் இப்போது இல்லை அன்புச்செழியனுக்கு ஐடி சம்மன்: இன்று நேரில் ஆஜராக அறிவுறுத்தல் ஹைட்ரோ கார்பன், மீத்தேனுக்கு அனுமதியில்லை என அறிவிப்பு: 274 எண்ணெய் கிணறுகள் பணி நிறுத்தப்படுமா?..பழைய ஒப்பந்தம் ரத்து ஆகுமா

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பா தலைமையிலான பாஜ அரசின் 2வது கட்ட அமைச்சரவை விஸ்தரிப்பு இன்று காலை நடந்தது. 10 பேருக்கு ஆளுநர்  வி.ஆர்.வாலா பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.முதல்வர் எடியூரப்பா தலைமையிலான ஆட்சியை பாதுகாத்துக்கொள்ள மஜத-காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்களை ஆபரேஷன் தாமரை திட்டத்தின்  கீழ் ராஜினாமா செய்தனர். பின்னர் 15 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்றது. இதில் பாஜ சார்பில் போட்டியிட்ட 12 பேர் ெவற்றி  பெற்றனர்.

இவர்கள் அனைவருக்கும் அமைச்சர் பதவி அளிக்கவேண்டும் என ேகாரிக்கை எழுந்தது. ஆனால், இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 9 பேர் உட்பட மொத்தம் 13  பேர்களுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்படும் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது. இறுதியாக ஆட்சி அமைக்க காரணமாக இருந்த 10 எம்எல்ஏக்களை மட்டும் அமைச்சரவையில் சேர்த்து கொள்ள முடிவு செய்த எடியூரப்பா, இது தொடர்பாக பாஜ  தலைமையிடம் அனுமதி பெற்றார். அதை தொடர்ந்து இன்று காலை 10.30 மணிக்கு பெங்களூரு ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா  நடந்தது. இதில் ரமேஷ் ஜார்கிஹோளி (கோகாக்), எஸ்.டி. சோமசேகர் (யஸ்வந்தபுரம்),   கோபாலய்யா (மகாலட்சுமி லேஅவுட்), பைரதி பசவராஜ் (கே.ஆர். புரம்),  டாக்டர் கே. சுதாகர் (சிக்கபள்ளாப்பூர்), பி.சி. பாட்டீல் (ஹிரேகெரூர்),  நாராயணகவுடா (கே.ஆர். பேட்டை),

மந்த் பாட்டீல் (காகவாடா), சிவராம் ஹெப்பார்  (எல்லாபுரா) மற்றும் ஆனந்த் சிங் (விஜயநகர்) ஆகியோருக்கு பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.இவ்விழாவில் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா, மத்திய, மாநில அமைச்சர்கள், மாநில தலைமை செயலாளர் டி.எம்.விஜயபாஸ்கர், மாநில காவல்துறை தலைவர்  பிரவீண்சூட், பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர்ராவ் உள்பட அரசு அதிகாரிகள், புதியதாக பதவியேற்ற அமைச்சர்களின் குடும்பத்தினர்,  ஆதரவாளர்கள், பாஜ தொண்டர்கள் கலந்துகொண்டனர். பதவியேற்பு விழா காரணமாக ஆளுநர் மாளிகை வளாகம் பாஜ தொண்டர்களால் நிறைந்திருந்தது.  அமைச்சர்கள் பதவியேற்றப்போது, அவர்களது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

மேலும் சில
  • தோமாலை, சகஸ்கர கலசாபிஷேகம் உள்பட சிறப்பு சேவைகளில் பங்கேற்கும் பக்தர்களுக்கு இலவச பிரசாதம் ரத்து: திருப்பதி தேவஸ்தானம் அதிரடி



  • டெல்லி சட்டப்பேரவை தேர்தல் விறுவிறு வாக்குப்பதிவு...70 தொகுதிகளில் 13 ஆயிரம் வாக்குச்சாவடி



  • ஏழுமலையான் கோயில் கோபுரம் மீது விதிமுறைகளை மீறி பறந்த விமானம்: பக்தர்கள் கடும் அதிர்ச்சி



  • ஆன்லைன் வர்த்தக கொள்ளை அரசுக்கு தெரியுமா? : மக்களவையில் திமுக எம்பி தயாநிதிமாறன் கேள்வி



  • 70 தொகுதியில் நாளை மறுநாள் சட்டசபை தேர்தல் டெல்லியில் பிரசாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது...சிஏஏ போராட்ட பகுதி வாக்குச்சாவடிகளுக்கு ‘அலர்ட்’



  • பாஜக நிர்வாகிக்கு மிரட்டல் சுயேட்சை எம்எல்ஏ கைது: கோவாவில் பரபரப்பு



  • மாஜி ஜேஎன்யூ மாணவர் சங்க தலைவர் கன்னையா குமார் மீது தாக்குதல்..பீகாரில் கல்வீசி தாக்கியதில் 2 பேர் காயம்



  • கேரளாவில் தேசிய குடிமக்கள் பதிவேடு அமலாகாது: முதல்வர் திட்டவட்டம்



  • கேரளாவை மிரட்டும் கொரோனா வீடுகளில் இருந்து வெளியேற 2321 பேருக்கு 28 நாள் தடை...சுகாதாரத்துறை நடவடிக்கை



  • தெலங்கானா அமைச்சராகும் கேரள போலீஸ் ஐஜி: ஐபிஎஸ் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]