ஓடும் ரயிலில் செல்போன் திருடிய பெண் கைது
2/4/2025 4:32:15 PM
சென்னை: ஓடும் ரயிலில் செல்போன் திருடிய பெண்ணை ரயில்வே போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம், பல்லாவரம், கிண்டி, மாம்பலம் வழியாக தினமும் 100க்கும் அதிமான முறை மின்சார ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்நிலையில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் ரயில்களில் செல்போன், பணம் திருடுபோவதாக ரயில்வே போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி, சப்-இன்ஸ்பெக்டர் சரளா தலைமையிலான மாம்பலம் ரயில்வே போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு நோக்கி சென்ற மின்சார ரயிலில் பெண் ஒருவர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்த பெண்னிடம் போலீசார் விசாரணை செய்த போது முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளார். இதையடுத்து சந்தேகம் அடைந்த போலீசார், அவரை காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்த போது மதுரை மாவட்டத்தை சேர்ந்த தனலட்சுமி(35) என்பதும், செல்போன் திருடியதும் தெரியவந்தது. அவரை கைது செய்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.