கோல்டன் கேர்ள் சாம்பியன்ஷிப் 14 பதக்கங்களை குவித்த இந்தியா: சிறந்த குத்துச்சண்டை வீரர் பிராச்சி தங்கர்
2/4/2025 3:46:19 PM
ஸ்வீடன்: இந்தியாவின் ஜூனியர் மற்றும் இளைஞர் குத்துச்சண்டை வீரர்கள், ஸ்வீடனின் போராஸில் நடந்த கோல்டன் கேர்ள் சாம்பியன்ஷிப்பில் ஆறு தங்கம், ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் கோப்பை மற்றும் ‘சிறந்த குத்துச்சண்டை வீரர்’ விருது உட்பட 14 பதக்கங்களை வென்றனர்.ஜூனியர் மகளிர் அணி ஐந்து தங்கம், மூன்று வெள்ளி மற்றும் ஒரு வெண்கல பதக்கத்தை வென்றது. இளைஞர் அணி ஒரு தங்கம் மற்றும் நான்கு வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளது. ஜூனியர் பிரிவில் விளையாடும் அரியானாவின் பிராச்சி தங்கர் (50 கிலோ), ‘சிறந்த குத்துச்சண்டை வீரர்’ விருதை வென்றார். இவரை தவிர, எத்தோபி சானு வாங்ஜாம் (54 கிலோ), லாஷு யாதவ் (66 கிலோ), மஹி ராகவ் (80 கிலோ) தங்கப் பதக்கங்களையும் வென்றனர்.
இளைஞர் பிரிவில், முஸ்கன் (54 கிலோ) ஒரே ஒரு தங்கப் பதக்கத்தைப் பெற்றார். சன்யா நேகி (57 கிலோ), தீபிகா (64 கிலோ), முஸ்கான் (69 கிலோ) மற்றும் சாக்ஷி ஜஹ்தேல் (75 கிலோ) வெண்கலத்தை வென்றனர். ஜூனியர் பிரிவில் மூன்று வெள்ளிப் பதக்கங்களை ஜான்ஹவி சூரி (46 கிலோ) ரூடி லால்மிங்முவானி (66 கிலோ), தனீஷ்கா பாட்டீல் (80 கிலோ) வென்றனர், தியா நேகி 60 கிலோ ஸ்லாட்டில் வெண்கலத்தை வென்றார். இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் மொத்தம் 75 அணிகள் பங்கேற்றன.