அணியை ஒருங்கிணைப்பதில் தலைமை பண்பு இம்ரான் எப்படியோ... கோஹ்லியும் அப்படியே..!மாஜி கிரிக்கெட் வீரர் பாராட்டு
2/4/2025 3:45:37 PM
மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய அணி 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்ததால், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள், வர்ணனையாளர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகர் கூறியதாவது: விராட் கோஹ்லியின் தலைமையில் உள்ள இந்திய அணி, பாகிஸ்தானின் பிரதமரும் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கானின் கீழ் செயல்பட்ட பாகிஸ்தான் வலுவான அணியை போன்று தன்னம்பிக்கை மற்றும் தோல்வியின் விழும்பில் இருந்து மீளும் திறனை நினைவூட்டுகிறது. இந்திய அணி வலுவான சுய நம்பிக்கை உடைய அணியாக விளங்குகிறது. இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி, வெற்றி பெறுவதற்கான பல்வேறு வழிகளைக் கண்டறிந்தது, அதற்கான பல்வேறு வியூகங்களை வகுத்து கூட்டாக செயல்படும். அதனால் பல பெற்றிகளை ெபற முடிந்தது. சமீபகாலமாக விக்கெட் கீப்பிங்கில் கே.எல்.ராகுல் சிறப்பாக செயல்படுகிறார். இவ்வாறு அவர் கூறினார்.