திருப்பதி கோயில் உண்டியலில் செலுத்திய கை கடிகாரங்கள் ஆன்லைனில் ஏலம்
2/4/2025 3:37:25 PM
திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலில் செலுத்திய கை கடிகாரங்கள் வரும் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆன்லைனில் ஏலம் விடப்பட உள்ளது.திருப்பதி ஏழுமலையான் கோயில் மற்றும் தேவஸ்தானத்தின் இதர கோயில்களில்
உள்ள உண்டியலில் பக்தர்கள் வேண்டுதலுக்கு ஏற்ப பணம், வெளிநாட்டு டாலர்கள், தங்கம், வைரம், வெள்ளி நகைகள் மற்றும் கம்பெனி கை கடிகாரங்கள் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களையும் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கைக்கடிகாரங்கள் வரும் 10ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஆன்லைனில் ஏலம் விடப்பட உள்ளது. மாநில அரசின் இ-போர்ட்டல் மூலம் விற்பனை செய்யப்பட உள்ள இந்த ஏலத்தில் புதிய, பழைய, சிறிதுசேதமானது என மொத்தம் 128 வாட்சுகள் ஏலத்திற்கு வைக்கப்பட உள்ளது. இவை (ஐ.எம்.இ 202047, 20848, 20849, 20850, 20851 மற்றும் 20852) எண்களில் ஆன்லைன் ஏலத்தில் வைக்கப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு திருப்பதியில் உள்ள தேவஸ்தான மார்க்கெட்டிங் அலுவலகம் எண் 0877-2264429 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அல்லது தேவஸ்தான இணையத்தில் www.tirumal.org அல்லது மாநில அரசு போர்ட்டல் www.konugolu.ap.gov.in பார்வையிடலாம் என தேவஸ்தானம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.