இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு

2/4/2025 2:32:34 PM
கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்: தி.நகர் பஸ் நிலையம் அருகே அவரே வாங்கினார்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை பெற்ற சசிகலா ₹10 கோடி அபராதம் செலுத்த வேண்டும். அபராதம் செலுத்த தவறும்பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என்று சிறைத்துறை அதிகாரிகள் கூறினர். இதனால் தேர்தல் நேரத்தில் விடுதலையாகி அதிமுகவை உடைப்பாரா அல்லது சிறையில் காலத்தை கழிப்பாரா என்ற புதிய பரபரப்பு எழுந்துள்ளது.சொத்து குவித்த வழக்கில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் 2017ம் ஆண்டு பிப்ரவரியில் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர். 2014ம் ஆண்டு செப்டம்பரில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியும்,  சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 10 கோடியும் அபராதம் விதித்தது. அபராத தொகை கட்ட தவறும்பட்சத்தில் மேலும் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என்றும் அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

பெரிய அளவில் அபராதம் விதிக்கப்படுபவர்கள், சிறை தண்டனையின் முடிவில் தான் அபராத தொகையை கட்டுவார்கள். சசிகலாவை பொறுத்தவரை செக் அல்லது வங்கி டிமான்ட் டிராப்ட் ஆகவே பணத்தை கட்ட வேண்டும். அந்த பணம் எவ்வாறு வந்தது, என்பதற்கு வருமான வரித்துறையிடம் ஆதாரத்தை காட்டி தடையில்லா சான்று பெற்றிருக்க வேண்டும். நன்னடத்தை காரணமாக சசிகலா முன்கூட்டியே விடுவிக்கப்படுகிறார் என்பது வதந்தி. கொலை, கொள்ளை, கற்பழிப்பு வழக்குகளில் 14 ஆண்டு சிறை தண்டனை பெற்றவர்களுக்கே அந்த விதி பொருந்தும். ஊழல் வழக்கில் அவ்வாறு நன்னடத்தை விதி கடைபிடிக்கப்படாது என்று கூறப்படுகிறது. சசிகலா அபராதம் கட்டும்பட்சத்தில் 2021 ஜனவரி 25ம் தேதி சிறையிலிருந்து விடுவிக்கப்படுவார். அபராதம் செலுத்த தவறும்பட்சத்தில், அபராதத்திற்கு பதில் மேலும் ஓராண்டு சிறை தண்டனை வழங்கப்படும்.

அவர், 2022ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி விடுவிக்கப்படுவார் என்றும் கர்நாடக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறினார். வருமான வரித்துறை அதிகாரிகள் சசிகலாவுக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அவரது உறவினர்களின் வீடுகள் அலுவலகங்களில் சோதனை நடத்தினர். ரூ.5 ஆயிரம் கோடிக்கு சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் ரொக்கமாக அவ்வளவு பணத்தை கட்ட முடியாத சூழ்நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது. அவர் கட்ட முடியாவிட்டால், உறவினர்கள், நண்பர்கள் பண உதவி செய்யலாம். ஆனால் அவர்களுக்கும் வருமான வரி பிரச்னை ஏற்படும் என்பதால், அவருக்கு பணத்தை கட்ட யாராவது முன் வருவார்களா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் அவர் அபராதத்தைக் கட்டுவாரா? அல்லது மேலும் ஓராண்டு தண்டனை அனுபவிப்பாரா என்பது தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அவர் அடுத்த ஆண்டு ஜனவரியில் விடுதலையானால், மீண்டும் தீவிர அரசியலில் களம் இறங்குவார். அப்போது அதிமுக மீண்டும் உடைவதற்கு வாய்ப்பு உருவாகும். இதனால் மீண்டும் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • தேர்தலில் தோல்வியடைந்தும் ஊருக்கே விருந்து வைத்த திமுக வேட்பாளர்



  • தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: சிறப்பு ரயில் 6ம் தேதி வரை இயக்கம்



  • பழத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் ஜல்லிக்கட்டு காளை பரிதாப பலி



  • 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு



  • குருவாயூர் கோயிலில் நடிகை திடீர் திருமணம்



  • திருநின்றவூரில் பாழடைந்த வீட்டில் கொல்லப்பட்டவர் ஆவடி வாலிபர்: நண்பர்களுக்கு போலீசார் வலைவீச்சு



  • திருநின்றவூர் பெரியார் நகரில் கழிவுநீரை அகற்றாவிடில் போராட்டம்...திருவள்ளூர் கலெக்டரிடம் பகுஜன் சமாஜ் மனு



  • திருவள்ளூர் பகுதிகளில் உருக்குலைந்துள்ள மின்கம்பங்களால் மக்கள் பீதி



  • அண்ணா நினைவு நாள்: திமுகவினர் மரியாதை



  • விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்து பிப்ரவரி 13ம் தேதி ஆர்ப்பாட்டம்...தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]