குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்: தி.நகர் பஸ் நிலையம் அருகே அவரே வாங்கினார்
2/4/2025 2:30:02 PM
சென்னை: தி.நகர் பஸ்நிலையம் அருகே இன்று காலையில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு எதிராக மு.க.ஸ்டாலின் கையெழுத்தை வாங்கினார்.குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக திமுக கூட்டணி சார்பில் கையெழுத்து இயக்கம் மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது. கடந்த பிப்ரவரி 2ம் தேதி கொளத்தூரில் உள்ள திரு வி க நகர் பேருந்து நிலையம் அருகே திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கே.எஸ்.அழகிரி, வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்களும் கையெழுத்து இயக்கத்தை தொடங்கினர்.
தற்போது மாநிலம் முழுவதும் ஒரு கோடிக்கு மேல் கையெழுத்தை வாங்க, கூட்டணிக் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.அதன் ஒரு பகுதியாக இன்று காலை குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வணிகர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், பேருந்து பயணிகள், பொதுமக்கள், வியாபாரிகளிடம் மு.க.கையெழுத்து பெற்றார்.