இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

வரும் 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் டெல்லியில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி? : கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்

2/4/2025 2:19:05 PM
ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு

புதுடெல்லி: டெல்லியில் வருகிற 8ம் தேதி சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆம்ஆத்மி கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று, கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் வரும் 8ம் தேதி நடைபெற உள்ளது. ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வாக்குப்பதிவுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் 70 உறுப்பினர்களைக் கொண்ட பேரவையில், 54 முதல் 60 இடங்களில் ஆம் ஆத்மி கட்சி வெற்றிபெற வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. பாஜக 10 முதல் 14 இடங்களையும், காங்கிரஸ் குறைந்தது இரண்டு இடங்களையும் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த மக்களவைத் தேர்தலில், 46% பேர் பாஜகவுக்கும் 38% ஆம் ஆத்மிக்கும் வாக்களித்தனர். அவர்களில், மோடி பிரதமராக 75% பேரும், ராகுல் காந்தி பிரதமராக 8% பேரும் கருத்து தெரிவித்து இருந்தனர். குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) விவகாரத்தில், 71% பேர் அரசாங்கம் சரியானதைச் செய்ததாக தெரிவித்துள்ளனர். 52% பேர் ஷாஹீன் பாக் போராட்டத்திற்கு எதிராகவும், 25% பேர் மட்டுமே எதிர்ப்பாளர்களுக்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

மீதமுள்ள 24% பேர் இந்த விவகாரத்தில் எந்தவொரு திட்டவட்டமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. ஐபிஎஸ்ஓஎஸ் கணக்கெடுப்பில் டெல்லி முழுவதிலும் இருந்து தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 7,321 பேரின் கருத்துகளில் இருந்து முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஜன. 27 முதல் பிப். 1ம் தேதி வரை சமூக-பொருளாதார நிலைகளை அடிப்படையாக கொண்டு கருத்து கணிப்பு நடத்தப்பட்டிருப்பதால், கருத்துக் கணிப்பில் 5% அளவிற்கு வித்தியாசங்கள் இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சில
  • சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஆளுநர் மீது வழக்கு: உத்தரபிரதேச போலீஸ் நடவடிக்கை



  • திருப்பதி கோயில் உண்டியலில் செலுத்திய கை கடிகாரங்கள் ஆன்லைனில் ஏலம்



  • மருத்துவமனையில் 84 பேர் கண்காணிப்பு: கேரளாவை மிரட்டும் கொரோனா...மாநில பேரிடராக அறிவிப்பு



  • கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு



  • ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் செல்லும் பைப் லைனில் கேஸ் கசிவு: மின்சாரம் துண்டிப்பு; மக்கள் ஓட்டம்



  • தந்தை என்கவுன்டர், தாய் அடித்துக் கொலை: தவித்த சிறுமியை தத்தெடுத்த போலீஸ் ஐஜி: உத்தரபிரதேச மாநிலத்தில் நெகிழ்ச்சி



  • தமிழ்நாடு, பெங்களூரு, டெல்லியில் ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது எதிரொலி: போலீசாருக்கு தீவிரவாதிகள் மிரட்டல்...தமிழில் எழுதப்பட்ட அச்சுறுத்தல் பதிவு சிக்கியது



  • சிஏஏ ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது 4 நாளில் 3வது முறையாக டெல்லியில் நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு...தேர்தல் பணியில் இருந்து போலீஸ் அதிகாரி அதிரடி நீக்கம்



  • உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வு முன்பாக சபரிமலை வழக்கு நாளை விசாரணை



  • சீனாவில் இருந்து 2வது முறையாக இன்று காலை: 28 தமிழர்கள் உட்பட 323 பேர் டெல்லி வந்தனர்: இதுவரை 81 தமிழர் உட்பட 654 பேர் மீட்பு: சீனாவில் வைரஸ் பலி 304 ஆக அதிகரிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]