ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்ட பும்ராவை எனக்கு ரொம்ப பிடிக்கும்: பாலிவுட் நடிகை ‘ஓபன் டாக்’
2/3/2025 4:57:19 PM
மும்பை: இந்தியா - நியூசிலாந்து இடையிலான இறுதி டி20 போட்டிக்கு முன்னதாக, பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பதானி, ஆதித்யா ராய் கபூர், அனில் கபூர் மற்றும் குணால் கெமு ஆகியோர் போட்டியின் அதிகாரப்பூர்வ ஒளிபரப்பு சேனலில் ஒரு விவாதம் நடத்தினர். அப்போது மில்லியன் கணக்கான ரசிகர்களின் மனதை ஆளும் நடிகை திஷா பதானி, தனக்கு பிடித்த கிரிக்கெட் வீரரைப் பற்றி பேசினார். அப்போது அவர் கூறுகையில், “நான் ஒரு போட்டியாளரை தேர்வு செய்ய வேண்டியிருந்தால், அது ஜஸ்பிரித் பும்ரா தான். அவர் எங்களிடம் உள்ள மிகச் சிறந்த வீரர்களில் ஒருவர். அவரை எனக்கு ரொம்ப பிடிக்கும். பிப். 2ம் தேதி நம் அனைவருக்கும் பெருமையான தருணமாக இருக்கிறது’’ என்று கூறினார்.
அனில் கபூர், இந்திய கேப்டன் விராட் கோஹ்லியை பிடிக்கும் என்றார். குணால் கெமு, துணை கேப்டன் ரோஹித் சர்மாவைப் பாராட்டினார். அவர், “ரோஹித் சர்மா டீம் இந்தியாவின் ‘ஹிட்மேன் ’- ஆடுகளத்தின் மீதான அவரது நம்பிக்கை வியக்க வைக்கிறது. அவர் ஒரு பேட்டிங் மேஸ்ட்ரோ; அச்சமின்றி பெரிய ஷாட் அடிக்கிறார்’ என்றார். இறுதியாக, ஆதித்யா ராய் கபூர், கே.எல்.ராகுலை தனக்கு பிடித்தவராக தேர்ந்தெடுத்தார். அப்போது அவர், ‘சிறந்த ஆல்ரவுண்ட் கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல்தான்; அவரது விளையாட்டைப் பார்ப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்றார். நேற்றைய போட்டியில், இந்தியா வெற்றிப் பெற்றும், ஆட்ட நாயகனாக பும்ரா அறிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.