இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஆந்திர மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் விவசாய நிலத்தில் செல்லும் பைப் லைனில் கேஸ் கசிவு: மின்சாரம் துண்டிப்பு; மக்கள் ஓட்டம்

2/3/2025 4:46:51 PM
ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு

திருமலை: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம் உப்பிடு கிராமத்தில் ஓஎன்ஜிசி நிறுவனத்தின் சார்பில் 10 ஆண்டுகளுக்கு முன்பு எரிவாயு கிணறு அமைக்கப்பட்டது.  இந்த கிணற்றை ஓஎன்ஜிசி நிறுவனம் கடந்த 2016ம் ஆண்டு மத்திய அரசுக்கு வழங்கியது. பின்னர் இந்த எரிவாயு கிணற்றை கொல்கத்தாவை சேர்ந்த பிஎச்எப்  நிறுவனம் ஒப்பந்த முறையில் மத்திய அரசிடமிருந்து பெற்று கேஸ் உற்பத்தி செய்து வருகிறது.நேற்று மாலை எரிவாயு கிணற்றில் இருந்து விவசாய நிலம் வழியாக செல்லும் பைப் லைனில் திடீரென உடைப்பு ஏற்பட்டு பயங்கர சத்தத்துடன் கேஸ்  வெளியேறியது. அங்கு விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், கிராமமக்கள் மற்றும் பணியில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து ஓட்டம் பிடித்தனர்.  கேஸ் கசிவு காரணமாக அப்பகுதியில் உள்ளவர்களுக்கு கண் எரிச்சல் மற்றும் உடலில் அரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

12 மணி நேரத்திற்கு மேலாக கேஸ் கசிவு ஏற்பட்டு வருகிறது. ஓஎன்ஜிசி நிறுவனத்தின் தீயணைப்பு வாகனங்கள் கேஸ் கசிவு ஏற்பட்ட இடத்தில் தண்ணீரை  பீய்ச்சியடித்து அணைத்தனர்.  ஆனால் இதுவரை நிபுணர்கள் குழுவினர் யாரும் சம்பவ இடத்திற்கு வரவில்லை. எரிவாயு கிணற்றை ஒப்பந்தத்திற்கு எடுத்துள்ள  பி.எச்.எப். நிறுவனம் இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.இதுபற்றி ஓஎன்ஜிசி நிறுவனம் அதிகாரிகள் கூறுகையில், ‘கேஸ் கசிவு ஏற்படுவதற்கும், ஓஎன்ஜிசி நிறுவனத்திற்கும் தொடர்ப்பு இல்லை. இருப்பினும் சமூக  அக்கறையுடன் கேஸ் கசிவை சரிசெய்ய தேவையான உதவிகளை எங்களது நிபுணர் குழுவினர் செய்வார்கள்’ என்றார்.

இதனிடையே கேஸ் கசிவு ஏற்பட்ட இடத்தில் கலெக்டர் முரளிதர், எஸ்.பி. நயீம் ஆஸ்மி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பிரச்ைன ஏற்படாமல்  இருக்க நேற்று முதல் மின்சாரம், செல்போன் டவர்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஒரு கிலோமீட்டர் சுற்றளவிற்கு பொதுமக்கள் யாரையும்  அனுமதிக்கப்படவில்லை. அங்கு வசிக்கும் பொதுமக்கள் அனைவரையும் மீட்டு புனர்வாழ்வு மையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.கடந்த 2014ம் ஆண்டு கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் கேஸ் கசிவு ஏற்பட்டு நடந்த தீ விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

மேலும் சில
  • சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் ஆளுநர் மீது வழக்கு: உத்தரபிரதேச போலீஸ் நடவடிக்கை



  • திருப்பதி கோயில் உண்டியலில் செலுத்திய கை கடிகாரங்கள் ஆன்லைனில் ஏலம்



  • மருத்துவமனையில் 84 பேர் கண்காணிப்பு: கேரளாவை மிரட்டும் கொரோனா...மாநில பேரிடராக அறிவிப்பு



  • கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு



  • வரும் 8ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் டெல்லியில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி? : கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்



  • தந்தை என்கவுன்டர், தாய் அடித்துக் கொலை: தவித்த சிறுமியை தத்தெடுத்த போலீஸ் ஐஜி: உத்தரபிரதேச மாநிலத்தில் நெகிழ்ச்சி



  • தமிழ்நாடு, பெங்களூரு, டெல்லியில் ஐஎஸ் ஆதரவாளர்கள் கைது எதிரொலி: போலீசாருக்கு தீவிரவாதிகள் மிரட்டல்...தமிழில் எழுதப்பட்ட அச்சுறுத்தல் பதிவு சிக்கியது



  • சிஏஏ ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது 4 நாளில் 3வது முறையாக டெல்லியில் நள்ளிரவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு...தேர்தல் பணியில் இருந்து போலீஸ் அதிகாரி அதிரடி நீக்கம்



  • உச்சநீதிமன்ற 9 நீதிபதிகள் அமர்வு முன்பாக சபரிமலை வழக்கு நாளை விசாரணை



  • சீனாவில் இருந்து 2வது முறையாக இன்று காலை: 28 தமிழர்கள் உட்பட 323 பேர் டெல்லி வந்தனர்: இதுவரை 81 தமிழர் உட்பட 654 பேர் மீட்பு: சீனாவில் வைரஸ் பலி 304 ஆக அதிகரிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]