இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

இன்று காலை 4ம் கால யாகசாலை பூஜை பெரிய கோயில் கும்பாபிஷேக ஏற்பாடு குறைகள் தெரிவிக்க ‘நம்ம தஞ்சை ஆப்ஸ்’

2/3/2025 4:46:01 PM
ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு

தஞ்சை: தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேக ஏற்பாடுகளில் குறைகள் தெரிவிக்க நம்ம தஞ்சை ஆப்ஸ் துவங்கப்பட்டுள்ளது.தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழா வருகின்ற 5ம் தேதி காலை நடைபெறுகிறது. இதற்காக கோயிலுக்கு புனித நீர் எடுத்து வரப்பட்டு அந்த நீர், 1ம் தேதி  யாகசாலையில் வைத்து முதல்கால யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று காலை 2ம் கால யாகசாலை பூஜையும் அன்றைய தினம் மாலையில் 3ம் கால  யாகசாலை பூஜையும் நடந்தது. இன்று காலை 4ம்கால யாகசாலை பூஜை தொடங்கியது. சிவாச்சாரியார்கள், ஓதுவார்கள் கலந்து கொண்டு மந்திரங்கள் ஓதினர்.  நேற்று விடுமுறை தினம் என்பதால் மக்கள் குடும்பம்குடும்பமாக வந்து பெருவுடையாரை தரிசித்து சென்றனர்.

கும்பாபிஷேக ஏற்பாடுகள் குறித்து கலெக்டர் கோவிந்தராவ் நேற்று கோயிலில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது: பெரியகோயில் கும்பாபிஷேகத்தையொட்டி தொடங்கப்பட்டுள்ள “நம்ம தஞ்சை” செயலி மூலமாகவும் மாவட்ட கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம்,  தாசில்தார் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதற்கான தொலைபேசி எண்கள் “நம்ம தஞ்சை” செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த  ஒரு குறை இருந்தாலும் அந்த எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழில் கும்பாபிஷேகம் நடத்த சுவரொட்டி: 2 பேர் கைது

மக்கள் அதிகாரம் அமைப்பின் தஞ்சை பகுதி செயலாளர் தேவா மற்றும் அந்த அமைப்பை சேர்ந்த பாலாஜி ஆகியோர் தஞ்சை புதிய பேருந்து நிலைய பகுதியில்  நேற்று மாலை சுவரொட்டி ஒட்டினர். அதில், ‘’தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு, கட்டியவன் தமிழன், வழிப்படுபவனும் தமிழன், சமஸ்கிருதத்துக்கு  இங்கென்ன வேலை, தமிழில் மட்டுமே குடமுழுக்கு நடத்து’’ என்று வாசகங்கள் இருந்தது. இதை பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த மருத்துவக்கல்லூரி  போலீஸ் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்தரசன் இருவரையும் கைது செய்து தஞ்சை 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இவ்வழக்கை  விசாரித்த நீதிபதி மோசஸ் ஜோசப் செபாஸ்டின், இருவரையும் வரும் 16ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் பாபநாசம்  சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் சில
  • ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு



  • குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய மு.க.ஸ்டாலின்: தி.நகர் பஸ் நிலையம் அருகே அவரே வாங்கினார்



  • முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது...டிஎன்பிஎஸ்சி முறைகேடுகள் குறித்து முக்கிய ஆலோசனை



  • 5 லட்சம் பேரை வரவேற்க ஏற்பாடுகள் தயார்: தஞ்சை பெரிய கோயிலில் நாளை குடமுழுக்கு...சிறப்பு ரயில், பஸ்கள் மூலம் பக்தர்கள் குவிகின்றனர்



  • தைப்பூச தெப்ப உற்சவத்தை முன்னிட்டு வரும் 8ம் தேதி ராமேஸ்வரம்கோயிலில் நடையடைப்பு



  • சீனாவில் இருந்து வந்தவிழுப்புரம் மாணவிக்கு கொரோனா பரிசோதனை



  • பட்ஜெட்டில் தொழிலாளர்கள் புறக்கணிப்பு: நாளை மாநிலம் தழுவிய போராட்டம்



  • குன்றத்தூர் அருகே வெடிகுண்டு வீசி வாலிபர் படுகொலை: குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படை தீவிரம்



  • ஆட்டோவை பறிமுதல் செய்ததால் மின்கம்பியை பிடித்து டிரைவர் தற்கொலை: 2வது நாளாக போராட்டம்



  • அனுமதியின்றி அம்பேத்கர் சிலை வைத்திருந்ததாக வி.சிறுத்தைகள் கட்சியினர் 7 பேர் மீது வழக்குப்பதிவு: கும்மிடிப்பூண்டியில் போலீஸ் குவிப்பதால் பதற்றம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]