சீனாவில் இருந்து வந்தவிழுப்புரம் மாணவிக்கு கொரோனா பரிசோதனை
2/3/2025 4:43:00 PM
விக்கிரவாண்டி: சீனாவில் இருந்து விழுப்புரம் வந்துள்ள மாணவிக்கு மருத்துவமனையில் தீவிர பரிசோதனை நடத்தப்பட்டது.விழுப்புரம் பகுதியை சேர்ந்த அரசு ஊழியர்களின் மகள் சீனாவில் 2ம் ஆண்டு மருத்துவ படிப்பு படிக்கிறார். சீனாவில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு காரணமாகநூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்காரணமாக சீனாவில் தங்கியுள்ள இந்தியாவை சேர்ந்தவர்கள் தாயகம் திரும்பி வருகின்றனர். விழுப்புரத்தை சேர்ந்த மாணவியும் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு சீனாவில் இருந்து சொந்த ஊருக்கு வந்து பெற்றோருடன் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சீனாவில் இருந்து வந்துள்ளதால் பெற்றோர்கள் அவரை விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பரிசோதனைக்காக சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் தனி வார்டு அமைக்கப்பட்டு மாணவிக்கு வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் உள்ளனவா? என தீவிர பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.