இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் அமைதிப் பேரணி: மலர் வளையம் வைத்து அஞ்சலி

2/3/2025 2:46:59 PM
ரூ.10 கோடி அபராதம் செலுத்த தவறினால் சசிகலாவுக்கு மேலும் ஓராண்டு சிறை?: தமிழக அரசியலில் புதிய பரபரப்பு கேரளாவில் கொரோனா பாதிப்பால் பேரிடர் அறிவிப்பு எதிரொலி: நாடு முழுவதும் விமான நிலையங்கள் சர்வதேச துறைமுகங்கள் கண்காணிப்பு...5 மத்திய அமைச்சக துறைகள் ஒருங்கிணைப்பு

சென்னை: அறிஞர் அண்ணாவின் 51வது நினைவு தினத்தை முன்னிட்டு, ஆயிரக்கணக்கான திமுகவினர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணியாக வந்து மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா  நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.அறிஞர் அண்ணாவின் 51வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த பேரணி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து இன்று காலை தொடங்கி மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தை சென்றடைந்தது.

 முன்னதாக, அண்ணா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பேரணியாக வந்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அப்போது திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மை செயலாளர் கே.என்.நேரு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், துணை பொதுச் செயலாளர் வி.பி.துரைசாமி, மாவட்ட செயலாளர்கள் சேகர் பாபு, ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், மாதவரம் சுதர்சனம், சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, ரவிச்சந்திரன், ரங்கநாதன் உள்ளிட்ட திமுக முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஆயிரக்கணக்கானோர் பேரணியாக வந்து அண்ணா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். இதை தொடர்ந்து, அண்ணா நினைவிடம் அருகே உள்ள தலைவர் கலைஞர் நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

டிஎன்பிஎஸ்சி அலுவலகம் நாளை முற்றுகை

இந்த பேரணியை தொடர்ந்து, திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘டிஎன்பிஎஸ்சி முறைகேட்டை கண்டித்து நாளை டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு தொடர்பாக நியாயமான முறையில் விசாரணை நடைபெற வேண்டும். சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டால் மட்டுமே நியாயமான முறையில் விசாரணை நடைபெறும்’’ என்றார்.

அண்ணா விரும்பிய தமிழகம்அமைக்க சபதம் ஏற்போம்: மு.க.ஸ்டாலின் முகநூல் பதிவு

சென்னை: அண்ணா விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம் என்று மு.க.ஸ்டாலின் தனது முகநூல் பதிவில் கூறியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:அரசியல் அறத்தை போதித்த காஞ்சி தந்த வள்ளுவன். கொள்கை உரத்தை ஊட்டிய இந்நூற்றாண்டின் தலைவன். பேரறிஞர் பெருந்தகை அண்ணாவின் 51வது  நினைவு நாள் இன்று. அவரை மறந்தால் அல்லவா நினைப்பதற்கு?. அவரது குரலும், கொள்கையும், கோட்பாடும் வாழ்க்கையும், வாழ்த்தும் என்றும் நம்மை  இயக்கிக் கொண்டு இருக்கிறது. அண்ணா விரும்பிய தமிழகம் அமைக்க சபதம் ஏற்போம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் சில
  • தேர்தலில் தோல்வியடைந்தும் ஊருக்கே விருந்து வைத்த திமுக வேட்பாளர்



  • தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு: சிறப்பு ரயில் 6ம் தேதி வரை இயக்கம்



  • பழத்தில் விஷம் கலந்து கொடுத்ததால் ஜல்லிக்கட்டு காளை பரிதாப பலி



  • 4 பேருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை: அயனாவரம் சிறுமி பலாத்கார வழக்கில் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு



  • குருவாயூர் கோயிலில் நடிகை திடீர் திருமணம்



  • திருநின்றவூரில் பாழடைந்த வீட்டில் கொல்லப்பட்டவர் ஆவடி வாலிபர்: நண்பர்களுக்கு போலீசார் வலைவீச்சு



  • திருநின்றவூர் பெரியார் நகரில் கழிவுநீரை அகற்றாவிடில் போராட்டம்...திருவள்ளூர் கலெக்டரிடம் பகுஜன் சமாஜ் மனு



  • திருவள்ளூர் பகுதிகளில் உருக்குலைந்துள்ள மின்கம்பங்களால் மக்கள் பீதி



  • அண்ணா நினைவு நாள்: திமுகவினர் மரியாதை



  • விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்து பிப்ரவரி 13ம் தேதி ஆர்ப்பாட்டம்...தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவிப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]