இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பெண் டாக்டர், அதிமுக கவுன்சிலரை தொடர்புபடுத்தி வாட்ஸ் அப் வைரல்: அதிமுக செயலாளர் கைது

1/29/2020 3:24:56 PM
பாமக போராட்டத்திற்கு தடை எதிரொலி: சென்னை ரயில் மீது கல்வீசி தாக்குதல் எதிர்கட்சிகளை அடக்க நினைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறையை எல்லைக்கு அனுப்புங்கள்..! மத்திய அரசுக்கு சிவசேனா கண்டனம்

லால்குடி: பெண் டாக்டர், அதிமுக கவுன்சிலரை தொடர்புபடுத்தி வாட்ஸ் அப்பில் பரப்பிய அதிமுக செயலாளர் கைது செய்யப்பட்டார். திருச்சி மாவட்டம் லால்குடி பச்சாம்பேட்டையை சேர்ந்தவர் குணசீலன். இவர் அதிமுக முன்னாள் ஒன்றிய செயலாளர். சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட குணசீலனுக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த குணசீலன், திருமணமேடு எசனைகோரை 17வது ஊராட்சி ஒன்றிய வார்டில் கவுன்சிலர் பதவிக்கு சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றிப்பெற்றார். இந்த தேர்தலில் மொத்தம் 21 ஒன்றிய கவுன்சிலர் வார்டில் திமுக 10 இடங்களையும் அதிமுக கூட்டணி 8 இடங்களையும், குணசீலன் உள்பட சுயேட்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றினர்.

லால்குடி அதிமுக ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசனின் மனைவி இசைவாணி ஆங்கரை ஊராட்சி ஒன்றியத்தில் கவுன்சிலராக வெற்றிப்பெற்று ஊராட்சி ஒன்றிய சேர்மன் தேர்தலில் போட்டியிட்டார். இதில் குணசீலன், திமுக வேட்பாளர் ரவிச்சந்திரனுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ததாக கூறப்படுகிறது. அதிமுக கட்சி மேலிடம் தனக்கு சீட் தராத விரக்தியில் அதிமுகவை பழி வாங்கியதாக குணசீலன் மீது கட்சியினர் அதிருப்தி அடைந்தனர். இந்தநிலையில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட குணசீலன் வெற்றிப்பெற லால்குடி பூவார் பகுதியை சேர்ந்த அரசு பெண் டாக்டர் பல லட்சம் செலவு செய்ததாக கூறப்படுகிறது.

கவுன்சிலர் குணசீலனையும் அந்த பெண் டாக்டரையும் தொடர்பு படுத்தி வாட்ஸ்அப்பில் அவதுாறு செய்திகள் வெளி வந்தது. இது தொடர்பாக குணசீலன் லால்குடி போலீசில் அளித்த புகார் மனுவில், ‘’என்னையும், அரசு பெண் டாக்டரையும் தொடர்பு படுத்தி அதிமுக ஒன்றிய செயலாளர் சூப்பர் நடேசன், வாட்ஸ்அப்பில் அவதூறு பரப்பி உள்ளார்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி சூப்பர் நடேசன் மீது பெண்ணை சித்தரித்து அவதூறு பரப்பியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

மேலும் சில
  • குடும்ப பிரச்னையில் பயங்கரம் ராயபுரம் அடுக்குமாடி குடியிருப்பில் உறவினர் மீது துப்பாக்கி சூடு



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: சிவசங்கர் ஐஏஎஸ் கைதாகிறார்?



  • ‘‘பழி தீர்க்க கொன்றோம்; இன்னும் பலரை கொல்வோம்’’ வக்கீல் ராஜேஷ் கொலை வழக்கு போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி: வியாசர்பாடியில் தொடர்ந்து பதற்றம்



  • கும்மிடிப்பூண்டி சோதனைச் சாவடி வழியாக ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு காரில் கடத்திய 50 கிலோ கஞ்சா பறிமுதல் : 3 பேர் அதிரடி கைது



  • உடல்நல கோளாறை சரி செய்வதாக கூறி தூக்க மாத்திரை கொடுத்து சிறுமியை பலாத்காரம் செய்த போலி மந்திரவாதி



  • கயத்தாறு அருகே ஆடு விவகாரத்தில் மோதல்: தொழிலாளியை காலில் விழ வைத்து மிரட்டிய 7 பேர் அதிரடி கைது



  • 2 தீவிரவாதிகள் அதிரடி கைது



  • திருவான்மியூர், நீலாங்கரை, ஈஞ்சம்பாக்கத்தில் தொடர் பைக் திருட்டு 2 சிறுவர்கள் கைது



  • முகப்பேரில் வீடு உடைத்து 18 பவுன் நகை கொள்ளை



  • ‘ஸ்பெஷல் கிளாஸ்’ என அழைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை: பேராசிரியர் கைது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]