இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஆன்லைன் வர்த்தகம், பிட்காயின் முதலீடு மூலம் இருமடங்கு பணம் தருவதாக ₹3 ஆயிரம் கோடி மோசடி

1/28/2020 2:40:38 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

ஈரோடு: ஆன்லைன் வர்த்தகம், பிட்காயின் ஆகியவற்றில் முதலீடு செய்தால், இருமடங்காக பணம் தருவதாக கூறி தமிழகம் முழுவதும் ரூ.3 ஆயிரம் கோடி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஈரோடு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தனர். சேலம் மாவட்டம் ஆரியபாளையம் கிழக்கு தெருவை சேர்ந்த சசிகுமார் (35). இவரும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், ஏஜெண்டுகள் நேற்று அகில பாரத இந்து மகாசபாவின் மாநில தலைவர் கல்கி ராஜசேகரன் தலைமையில் ஈரோடு மாவட்ட எஸ்.பி.அலுவலகத்தில் பிட்காயின் மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சசிகுமார் கூறியதாவது: எனது குடும்ப கஷ்டத்தின் காரணமாக பணம் சம்பாதிப்பதற்காக பல வழிகளை தேடியபோது எனது நண்பர் மூலமாக மல்லியக்கரையைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் அறிமுகமானார். அவர் ஆன்லைனில் ஒரு தொழில் உள்ளது. அதில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறினார். இதனால் கடந்த 2018ம் ஆண்டு ஸ்மார்ட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்வது குறித்து விளக்கமளித்தனர். அப்போது பன்னீர்செல்வம் கோபிசெட்டிப்பாளையத்தை சேர்ந்த சுபாஷ்சாமிநாதன் மற்றும் ராமதுரை ஆகியோர் பெரிய தொழிலதிபர்கள். தனது மாமியார் மரியசெல்வம் மூலமாக பல ஆயிரம் பேரை சேர்த்து ஆன்லைன் மூலமாக பணம் பெற்று வருவதாக பன்னீர்செல்வம் கூறினார்.

இதை நம்பி எனக்கு தெரிந்த நண்பர்களையும் சேர்த்து ரூ.12 லட்சம் சேலத்தில் வைத்து அவரிடம் கொடுத்தேன். மேலும் அங்கிருந்தவர்கள் சுபாஷ் சாமிநாதனுக்கு சொந்தமாக வெளிநாடுகளில் கே.ஏ.எஸ். குரூப் ஆப் கம்பெனி உள்ளது. அதில் முதலீடு செய்து உங்களுக்கு அதிக பணம் தருவோம் என்று கூறினார்கள்.
இதனை தொடர்ந்து நான் ஆயிரத்து 200 பேரை சேர்த்து ரூ.7 கோடி பணத்தை பன்னீர்செல்வத்திடம் கொடுத்தேன். இது தொடர்பாக பல மாவட்டங்களில் மீட்டிங் நடத்தினர். பின்னர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் மீட்டிங்கிற்கு ஈரோடு வருமாறு அழைத்தனர். இதை நம்பி வந்தபோது மீட்டிங் கேன்சல் ஆகி விட்டது எனக்கூறினர். ஆனால் நான் பணம் வாங்கி கொடுத்தவர்களுக்கு உரிய பணத்தை அவர்கள் தரவில்லை. இதுபற்றி பன்னீர்செல்வத்திடம் கேட்டபோது முறையாக பதில் அளிக்கவில்லை. மேலும் இதுதொடர்பாக போன் செய்தால் கொலை செய்து விடுவதாக அந்த கும்பல் மிரட்டியது.

ஆசை வார்த்தை கூறி ஆன்லைன் வர்த்தகம், பிட்காயின், மைனிங் மூலமாக ஏமாற்றியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
மேலும் புகார் அளிக்க வந்த ஏஜெண்டுகள் கூறியதாவது: தமிழகத்தில் பல மாவட்டங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏஜெண்டுகள் செயல்பட்டு வந்தோம். நாங்கள் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோரிடம் பணம் வசூல் செய்து கொடுத்தோம். இதுவரை ரூ.3 ஆயிரம் கோடி அளவிற்கு மோசடி செய்துள்ளனர். பணத்தை திருப்பி கேட்டால் எங்களுக்கு கொலைமிரட்டல் விடுக்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

மேலும் சில
  • சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு



  • சவரனுக்கு ரூ128 அதிகரிப்பு: தங்கம் விலை 2வது நாளாக உயர்ந்தது



  • 11 பேர் வழிகாட்டு குழு அமைத்த பிறகே முதல்வர் வேட்பாளர் அறிவிப்பு; ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பிடிவாதம்: ஆதரவாளர்களுடன் 2வது நாளாக இன்றும் ஆலோசனை



  • தங்கம் விலை மீண்டும் கிடு கிடு: ஒரே நாளில் பவுனுக்கு ரூ608 அதிகரிப்பு



  • கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி எப்போது?... தமிழக அரசு, சென்னை மாநகராட்சி பதில் தர ஐகோர்ட் உத்தரவு



  • நாளையுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் இன்று காலை மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஆலோசனை: மருத்துவ நிபுணர்களுடன் பிற்பகலில் ஆலோசனை



  • பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக செயற்குழு கூடியது; இபிஎஸ் - ஓபிஎஸ் ஆதரவாளர்கள் திரண்டு போட்டி போட்டு கோஷம்: கூட்டத்தில் 15 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது



  • மக்களை வஞ்சிக்கும் பாஜ, அதிமுக அரசுகளின் கூடாரம் விரைவில் காலியாகும்: தேர்தல் மூலம் பாடம் புகட்டப்படும் என்று மு.க.ஸ்டாலின் ஆவேசம்



  • தேமுதிக தலைவர் விஜயகாந்தை தொடர்ந்து மனைவி பிரேமலதாவுக்கும் கொரோனா: தனியார் மருத்துவமனையில் அனுமதி



  • மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து தமிழகத்தில் 3500 இடங்களில் ஆர்ப்பாட்டம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]