பஸ், லாரி டிரைவரை தாக்கி செயின் பணம் பறிப்பு: திருநங்கை கைது
1/23/2020 3:10:27 PM
தண்டையார்பேட்டை: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூரை சேர்ந்தவர் கோபி (25). இவர் டூரிஸ்ட் பஸ் டிரைவர். நேற்று காலை ெசன்ைன புதுவண்ணாரப்பேட்டை டோல்கேட் அருகே பஸ்சை நிறுத்திவிட்டு நின்றிருந்தார். அப்போது அங்கு வந்த புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பை சேர்ந்த திருநங்கை பாபு என்ற ரியானா (23) சென்று டிரைவர் கோபியிடம் பணம் கேட்டுள்ளார்.தன்னிடம் பணம் இல்லை என்று கோபி கூறியதால் அவருடன் ரியானா வாக்குவாதம் செய்து கோபி அணிந்திருந்த ஒரு சவரன் செயினை பறித்துவிட்டு தப்பிச்சென்றார்.
இதன்பிறகு அதே பகுதியில் நின்றிருந்த காசிமேடு பகுதியை சேர்ந்த கன்டெய்னர் லாரி டிரைவர் ராமதுரை (35) மிரட்டி பணம் பறித்துக்கொண்டு ரியானா அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதுபற்றி கொடுக்கப்பட்ட புகாரின்பேரில், புதுவண்ணாரப்பேட்டை போலீசார் ரியானாவை கைது செய்தனர்.