இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

கரீபியன் தீவில் நித்தியானந்தா: நெருங்கியது சர்வதேச போலீஸ்

1/23/2020 2:26:16 PM
சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து கூடுதலாக 7 சிறப்பு ரயில்கள் இயக்கம்?.. விரைவில் அறிவிப்பு ெவளியாக வாய்ப்பு குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை

பெங்களூர்: மெக்சிகோவுக்கு அருகே உள்ள, கரீபியன் தீவில் சாமியார் நித்தியானந்தா பதுங்கியிருப்பதாக சர்வதேச போலீசார் கண்டுபிடித்துள்ளனர். பரபரப்புக்கு பெயர்போனவர் சாமியார் நித்தியானந்தா. இவருக்கு இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் உள்ளன. சாமியாராக இருந்தாலும், இவர் மீது வராத புகார்களோ, சர்ச்சைகளோ இல்லை. இந்தநிலையில், பெங்களூருவை சேர்ந்த ஜனார்தன சர்மா என்பவர், நித்தியானந்தா, தனது மகள்களை கடத்தி சிறை வைத்திருப்பதாக குஜராத் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, நித்தியானந்தா மீது அகமதாபாத் போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்தனர்.

ஏற்கனவே நித்தியானந்தா மீது பாலியல் வழக்கு, ஆள் கடத்தல் வழக்கு என பல்வேறு வழக்குகள் கர்நாடகாவில் நிலுவையில் உள்ளதால், காவல்துறையில் சிக்கினால், எப்படியும் சிறை உறுதி என்பதை உணர்ந்த நித்தியானந்தா. வெளிநாடு ஓடி தலைமறைவாகிவிட்டார். இதனைதொடர்ந்து, அவர் ஈகுவடார் அருகே ஒரு தீவை விலைக்கு வாங்கி ‘கைலாசா’ என பெயர் சூட்டி தனி நாடாக அறிவிக்கும் முயற்சியில் இறங்கி, அதற்கான இணையதளங்களை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தினார். மேலும், தனது கைலாசா நாட்டில் குடியேற  லட்சக்கணக்கானோர் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து தன் வாழ்க்கை வரலாற்றை பற்றி சோக வீடியோ, நகைச்சுவை வீடியோ என பல வீடியோக்களை வெளியிட்ட அவர் தன் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக குற்றம் சாட்டினார். இந்தநிலையில், சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியுடன் நித்தியானந்தாவை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கடந்த டிசம்பர் மாதம் போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சர்வதேச போலீசை குஜராத் போலீசார் அணுகி நித்தியானந்தாவை கண்டுபிடிக்க உதவுமாறு வேண்டுகோள் வைத்தனர். இதன் அடிப்படையில் நித்தியானந்தாவுக்கு எதிராக சர்வதேச போலீசார் ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர்.

குற்ற வழக்கில் தேடப்படும் ஒருவரின் அடையாளம், இருப்பிடம், செயல்பாடுகள் ஆகியவை குறித்து தகவல் தெரிந்தால் சம்பந்தப்பட்ட நாடுகள் சர்வதேச போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவே ‘புளூ கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது. இதன் மூலம் சர்வதேச போலீசாரின் அதிகாரத்துக்குட்பட்ட 150 நாடுகளில் நித்தியானந்தா எங்கு பதுங்கி இருக்கிறார் என்ற விபரம் விரைவில் வெளியாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. அப்படி விபரம் வெளியானதும், நித்தியானந்தாவை கைது செய்ய சர்வதேச போலீசார் ‘ரெட்கார்னர்’ நோட்டீஸ் பிறப்பிப்பார்கள். அதனைதொடர்ந்து அவரை கைது செய்வார்கள்.

இந்தநிலையில், நித்தியானந்தா கியூபா மற்றும் மெக்சிகோவுக்கு அருகே உள்ள கரீபியன் தீவில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்காக அந்நாட்டு குடிமக்களுக்கு வழங்கப்படும் ‘பெஸிஸ்’ பாஸ்போர்ட்டை நித்தியானந்தா வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, அவரை நெருங்கிவிட்டதாக போலீசார், தெரிவித்துள்ளனர். விரைவில் நித்தியானந்தா கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில
  • குளிர்காலம், பண்டிகைகளால் மீண்டும் வேகமெடுக்குது... நாட்டில் 15 பேரில் ஒருவருக்கு கொரோனா: நிதி ஆயோக் உறுப்பினர், ஐசிஎம்ஆர் எச்சரிக்கை



  • 28 ஆண்டுக்கு முன் பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் அத்வானி உட்பட 32 பேரும் விடுதலை: வலுவான ஆதாரம் இல்லை என்று நீதிமன்றம் அறிவிப்பு



  • சென்னை, இம்பால், ராஞ்சியில் என்ஐஏ கிளை ஏன்?



  • கொரோனா ஊரடங்கு நீடிக்கும் நிலையில் இன்று 5ம் கட்ட தளர்வுகள் அறிவிப்பு?... சினிமா தியேட்டர், மண்டபங்கள் திறக்க வாய்ப்பு



  • உச்சநீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்த நிலையில் நிலம் கையகப்படுத்துதல் வழக்கில் முக்கிய திருப்பம்: புதிய கேள்விகளை எழுப்பி மீண்டும் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்



  • வேளாண் சட்டத்தை கண்டித்து வடமாநிலங்களில் வலுக்கும் போராட்டம்: டெல்லியில் டிராக்டருக்கு தீவைப்பு



  • வேளாண் மசோதா நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜ கூட்டணியில் இருந்து விலகியது சிரோன்மணி; 22 ஆண்டுகால உறவு முறிந்ததாக மாஜி அமைச்சர் அறிவிப்பு



  • உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சர் ஜஸ்வந்த் சிங் மரணம்; பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்



  • போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகை தீபிகா படுகோன் ஆஜர்: அடுத்தடுத்து நடிகைகள் சிக்குவதால் பரபரப்பு



  • பாஜக கூட்டணிக்கு வந்த மாஜி முதல்வருக்கு பரிசு மன்ஜிக்கு ‘இசட் பிளஸ்’ பஸ்வானுக்கு ‘இசட்’: பீகார் தேர்தலில் ஆளும் கூட்டணியில் சலசலப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]