இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

கீழக்கரையில் தங்கி பணம் வசூல் காஷ்மீர் வாலிபர்களிடம் விசாரணை: சென்னைக்கு அனுப்பிவைப்பு

1/22/2020 3:20:24 PM
சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம் தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சாயல்குடி: கீழக்கரையில் பணம் வசூலில் ஈடுபட்ட காஷ்மீர் இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்திவிட்டு சென்னைக்கு அனுப்பிவைத்தனர். ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் வட மாநிலங்களை சேர்ந்த 2 இஸ்லாமிய இளைஞர்கள் நன்கொடை வசூல் செய்வதாக உளவுத்துறை  போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மத்திய, மாநில உளவுத்துறை போலீசார் மற்றும் கியூ பிராஞ்ச் போலீசார், கீழக்கரை டிஎஸ்பி  முருகேசன் ஆகியோர் சென்று விசாரித்தனர். பின்னர் அந்த இளைஞர்கள் தங்கியிருந்த மேன்சனுக்கு சென்று விசாரணை நடத்தினர்.

அவர்கள் ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பாராமுல்லா மாவட்டத்தை சேர்ந்த செய்யது அகம்மது பீர்(32), இம்ரான் ஹபீப்ஷா(28) என தெரியவந்தது.  அங்குள்ள மதரசா எனப்படும் ஆதரவற்ற குழந்தைகள் தங்கி படிக்கும் பள்ளியில் பணியாற்றி வருவதாகவும் அங்கு படிக்கும் மாணவர்களின் கல்வி,  உணவு செலவிற்காக நன்கொடை வசூல் செய்வதற்காக தமிழகம் வந்துள்ளதாகவும் கூறியுள்ளனர். சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் இவர்களது உறவினர் படித்து வருகிறார்.

அவரது உதவியுடன் கடந்த ஒரு மாதமாக சென்னையில் தங்கி, அங்கும் நன்கொடை வசூல் செய்துள்ளனர்.  அவரின் அறிவுறுத்தலின்படி நன்கொடை வசூல் செய்வதற்காக கீழக்கரை  வந்துள்ளனர். கீழக்கரை பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் மேன்சனில் அறை எடுத்து தங்கிய அவர்கள், சிலரிடம் வசூல் செய்துள்ளது தெரிய வந்துள்ளது. இதையடுத்து போலீசார், 2 பேரின் ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை சரிபார்த்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு இருவரையும் சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சில
  • சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம்



  • தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி



  • தமிழகத்தில் ஊரடங்கு டிச.31வரை நீட்டிப்பு; கல்லூரிகள் டிசம்பர் 7ல் திறப்பு: 14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி



  • சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு



  • தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது



  • வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு



  • மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி



  • தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு



  • 3வது நாளாக மிதக்கிறது சென்னை புறநகர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]