சேலத்தில் முதல்வர் எடப்பாடி ஆத்தூர் பொதுக்கூட்டத்தில் இன்று மாலை பேசுகிறார்
1/21/2020 3:54:57 PM
சேலம்: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 103வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் மாநிலம் முழுவதும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள் நடக்கிறது. அதன்படி, சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் இன்று மாலை ஆத்தூரில் பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது. இதில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசுகிறார். இதற்காக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து இன்று காலை விமானம் மூலம் கோவை வந்தடைந்தார். அங்கிருந்து காரில் சேலம் வந்தார். இவருக்கு மாவட்ட எல்லையில், உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சேலம் வந்த முதல்வரை ஈரோடு மாவட்டத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் சந்தித்து வாழ்த்து பெற்று, அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். பின்னர், சேலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள வீட்டிற்கு முதல்வர் சென்றார். சேலம் புறநகர் மாவட்ட அதிமுக சார்பில், ஆத்தூர் ராணிப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் திடலில் இன்று மாலை 5 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ேபசுகிறார். ஆத்தூர் பொதுக்கூட்டத்தை முடித்துக்கொண்டு, முதல்வர் கார் மூலம் சென்னை செல்கிறார்.