இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தெற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில் பரபரப்பு 2 தீவிரவாதிகளுடன் போலீஸ் டிஎஸ்பி கைது: காரில் அழைத்து சென்ற போது சிக்கினார்

1/12/2025 2:24:23 PM
காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

காஷ்மீர்: தெற்கு காஷ்மீர் பள்ளத்தாக்கில், 2 தீவிரவாதிகளை அழைத்துக் கொண்டு சென்ற போலீஸ் டிஎஸ்பி கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து கைத்துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் விமான நிலைய போலீஸ் துணை போலீஸ் சூப்பிரண்டு (டிஎஸ்பி) டேவிந்தர் சிங் என்பவர், தெற்கு காஷ்மீரில் ரோந்து சென்ற போது இரண்டு ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகளுடன் காரில் தடுத்து வைக்கப்பட்டதாக நேற்றிரவு ராணுவ படைப் பிரிவுக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக, தெற்கு காஷ்மீர் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அதுல் கோயல் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள், டிஎஸ்பி மற்றும் தீவிரவாதிகள் இருக்கும் இடத்தை நோக்கி பயணித்தனர்.

​​தெற்கு காஷ்மீரின் குல்கத் மிர் பஜாரில், டிஎஸ்பியுடன் தீவிரவாதிகள் சென்ற காரை அதிகாரிகள் மடக்கிப் பிடித்தனர். விசாரணையில், ஷோபியன் பகுதியிலிருந்து 2 தீவிரவாதிகளை பள்ளத்தாக்குக்கு  வெளியே டிஎஸ்பி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. அதையடுத்து கைது ெசய்யப்பட்ட தீவிரவாதிகளில் லஷ்கர்-இ-தொய்பாவின் உயர் தளபதி நவீத் பாபு மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீனின் அல்தாஃப் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், தீவிரவாதிகளை காரில் அழைத்து சென்ற டிஎஸ்பி டேவிந்தர் சிங்கையும் அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர். இதுகுறித்து, தெற்கு காஷ்மீர் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அதுல் கோயல் கூறுகையில், ‘‘டிஎஸ்பி டேவிந்தர் சிங் தனது நிலையை இழந்து செயல்பட்டுள்ளார். காரில் இருந்து இரண்டு ஏ.கே. ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவரது வீட்டில் தேடுதல் நடத்தியபோது, இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் ஒரு ஏ.கே. துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. டிஎஸ்பி-யின் செயல்பாடு துரதிர்ஷ்டவசமானது. விசாரணைக்கு பின் அவர் விடுவிக்கப்படுவார். போலீஸ் டைரக்டர் ஜெனரல் தில்பாக் சிங் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்’’ என்றார்.

இந்த மாத தொடக்கத்தில், ஜம்மு-காஷ்மீரின் நகரில் இருந்து லஷ்கர்-இ-தொய்பா (எல்இடி) அமைப்போடு இணைந்த தீவிரவாதியான நிசார் அகமது தார் என்பவரை பாதுகாப்புப் படையினர் கைது செய்தனர். அவர் வசம் இருந்த ஆயுதங்களும் வெடிமருந்துகளும் மீட்கப்பட்டன.பாரமுல்லா மாவட்டத்தில் ஒரு தேடுதல் நடவடிக்கையின் போது லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி சதாம் மிர் கைது செய்யப்பட்டு குறைந்தது இரண்டு வாரங்களுக்குப் பின்னர், தற்போது டிஎஸ்பி-யுடன் 2 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பும் நிலையில், ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா ஆகிய அமைப்புகள், குளிர்காலம் முடிந்தவுடன் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு தயாராகி வருவதாக சமீபத்திய உளவுத்துறை அறிக்கைகள் எச்சரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]