இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தகவலில் பகீர்: 2018ம் ஆண்டில் 1,34,516 பேர் தற்கொலை

1/11/2025 2:22:39 PM
காற்றழுத்தம் கரையை கடந்தது வட மாவட்டங்களில் கனமழை பெய்யும் நவம்பர் வரை ரேஷன் அரிசி இலவசம்: முதல்வர் எடப்பாடி அறிவிப்பு

புதுடெல்லி: தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட தகவலின்படி, 2018ம் ஆண்டில் மட்டும் மொத்தம் 1,34,516 பேர் தற்கொலைகள் செய்து கொண்ட வழக்கு பதிவாகியுள்ள நிலையில், வேலையற்றோர் தற்கொலையில் தமிழகம் 2வது இடத்தில் உள்ளது. மொத்த தற்கொலையில் 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 3.6 சதவீதம் அதிகரித்துள்ளதாக பகீர் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு தற்கொலையும் ஒரு தனிநபரின் வாழ்க்கையை முன்கூட்டியே எடுக்கும்  மற்றும் தொடர்ச்சியான பாதிப்பை ஏற்படுத்தி அதன் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. இது குடும்பங்கள்,  நண்பர்கள் மற்றும் சமூகங்களின் பங்களிப்பை அடிப்படையாக கொண்டே நிகழ்கிறது. ஒவ்வொரு ஆண்டும் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் நாட்டில் தற்கொலை  செய்து கொள்கிறார்கள். தொழில்முறை பிரச்னைகள்,  தனிமை உணர்வு, துஷ்பிரயோகம், வன்முறை, குடும்ப பிரச்னைகள், மனநல  கோளாறுகள், மதுவுக்கு அடிமையாதல், நிதி இழப்பு, கடன், நாள்பட்ட வலி போன்ற  தற்கொலைகளுக்கான காரணங்களாக உள்ளன. இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (என்.சி.ஆர்.பி) வெளியிட்டுள்ள சமீபத்திய தகவல்களின்படி, 2018ம் ஆண்டில்  நாட்டில் 92,114 ஆண்கள் மற்றும் 42,391 பெண்கள் உட்பட மொத்தம் 1,34,516 தற்கொலைகள் செய்து கொண்டுள்ளனர். அதில் மொத்தம் 12,936 வேலையற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது, மொத்த தற்கொலைகளில் 9.6 சதவீதம்; 18 வயதுக்குக் குறைவானவர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இதில் அடங்குவர். 18 வயதிற்குட்பட்டவர்களில் 31 ஆண்களும், ஒன்பது பெண்களும் அடங்குவர்.

18 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் 1,240 ஆண்களும் 180 பெண்களும் உள்ளனர். மொத்தம் 868 ஆண்களும் 95 பெண்களும் 30 முதல் 45 வயதுக்குட்பட்டவர்கள். 237 ஆண்களும் 21 பெண்களும் 45 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள்; 2,431 ஆண்களும் 310 பெண்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் வேலையற்ற நபர்களின் மொத்த தற்கொலைகளில், ஆண்கள் 10,687 ஆகவும், பெண்கள் 2,249 ஆகவும் உள்ளனர். அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் மொத்த விகிதத்தில், 12.3 சதவீதம் பேர் அதாவது கேரளாவில் அதிகபட்சமாக 1,585 பேர் வேலையற்றோர் தற்கொலை செய்துள்ளனர். அடுத்து 2வது இடத்தில் 12.2 சதவீதத்துடன் 1,579 பேர் தமிழ்நாட்டில் வேைலயற்றோர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 9.7 சதவீதம் (1,260 தற்கொலை), கர்நாடகாவில் 8.5 சதவீதம் (1,094 தற்கொலைகள்) மற்றும் உத்தரபிரதேசத்தில் 7 சதவீதம் (902 தற்கொலைகள்) என்ற அடிப்படையில் மாநிலம் வாரியாக பட்டியல் நீளுகிறது. என்.சி.ஆர்.பி-யின் அறிக்கையின்படி, மக்கள் தொகை கணக்கெடுப்பு அல்லாத ஆண்டுகளில் திட்டமிடப்பட்ட மக்கள்தொகையைப் பயன்படுத்தி தற்கொலைகளின் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. 2017ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது நாட்டில் மொத்தம் 1,34,516 தற்கொலைகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, இது 2017 உடன் ஒப்பிடும்போது 3.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

தற்கொலை செய்து கொண்டவர்களில் மொத்தம் 1.3 சதவீதம் (1,707 பேர்) அரசு ஊழியர்கள், தனியார் துறை நிறுவனங்களிலிருந்து பாதிக்கப்பட்டவர்களில் 6.1 சதவீதம் (8,246 பேர்) அடங்குவர். மொத்த தற்கொலைக்கு ஆளானவர்களில் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள் 1.5 சதவீதம் (2,022 பேர்) உள்ளனர். அதே நேரத்தில் மாணவர்கள் மற்றும் வேலையில்லாமல் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த தற்கொலைகளில் 7.6 சதவீதம் (10,159 பேர்); 9.8 சதவீதம் பேர்  (13,149 பேர்) சுயதொழில் புரிபவர்களாக உள்ளனர். விவசாயத் துறையில் மொத்தம் 10,349 பேர் (5,763 விவசாயிகள் மற்றும் விவசாயிகள் மற்றும் 4,586 விவசாயத் தொழிலாளர்கள்) 2018ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது நாட்டில் மொத்த தற்கொலை பாதிக்கப்பட்டவர்களில் 7.7 சதவீதம். 11 திருநங்கைகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 2018ம் ஆண்டை பொறுத்தவரை, ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒரு வேலையற்ற நபர் தற்கொலை செய்து கொண்டதாக என்.சி.ஆர்.பி-யின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • அயோத்தியில் கோலாகல விழா: ராமர்கோயிலுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி



  • அயோத்தியில் நாளை ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு: பிரதமர் மோடி பங்கேற்பதால் உ.பி.யில் சிறப்பு படை குவிப்பு



  • கேரள தங்க கடத்தல் வழக்கில் திடுக் தீவிரவாதிகளுக்கு துப்பாக்கிகளும் கடத்தல்? கைதான ரமீஸிடம் விசாரிக்க என்ஐஏ முடிவு



  • அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் ஒரே நாளில் 52,050 பேருக்கு கொரோனா பாதிப்பு



  • கொரோனா வார்டில் துடித்த நோயாளி கவனிக்க ஆளில்லாத அவலம்: அரசு மருத்துவமனைகளில் அநியாயம்; அக்கிரமம்



  • 20க்கும் மேற்பட்ட மாநில அமைச்சர்களுக்கு கொரோனா: அமித் ஷாவை தொடர்ந்து எடியூரப்பா, மகளுக்கு தொற்று



  • சுஷாந்த் சிங்கின் காதலியை விசாரிக்க சென்ற போது மும்பை-பாட்னா போலீசாரிடையே மோதல்: பீகார் போலீஸ் எஸ்பி தனிமைப்படுத்தப்பட்டதால் பரபரப்பு



  • 5ம் தேதி ராமர் கோயில் பூமி பூஜை ஏற்பாடுகள் ஆய்வு; அயோத்தியில் உ.பி முதல்வர் இன்று முகாம்: காணொலியில் அத்வானி உட்பட தலைவர்கள் பங்கேற்பு



  • திருவனந்தபுரம் தூதரகம் வழியாக 21 முறை தங்கம் கடத்தியது அம்பலம்; சொப்னா கும்பல் குறித்து திடுக் தகவல்கள்



  • கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஓராண்டில் 6 முறை துபாய் சென்ற சொப்னா



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]