இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

விசாகப்பட்டினம் மாவட்டம் இன்னோவேஷன் வேலியில் ஆந்திர தலைமை செயலகம்: விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

1/9/2025 3:47:35 PM
விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா

திருமலை: விசாகப்பட்டினம் மாவட்டத்தில் தலைமை செயலகத்திற்கு ஏற்ற இடமாக இன்னோவேஷன் வேலி தேர்வு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது. ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் இருந்தபோது குண்டூர் மாவட்டத்தில் உள்ள 3 மண்டலங்களில் 29 கிராமங்களை இணைத்து அமராவதி தலைநகர் அமைக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் ஜெகன்மோகன் அரசு பதவி ஏற்ற பிறகு ஒரே இடத்தில் தலைநகர் அமைக்க ₹1 லட்சம் கோடி முதலீடு செய்வதைக் காட்டிலும் மாநிலம் முழுவதும் சம வளர்ச்சி வேண்டும் என தெரிவித்தார். இதற்காக 2 கமிட்டிகள் அமைக்கப்பட்டது. இதன் முடிவுகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த 2 கமிட்டியின் அறிக்கையை வைத்து மாநில அரசின் சார்பில் நியமிக்கப்பட்ட உயர் கமிட்டியினர் பரிசீலித்து, விசாகப்பட்டினத்தில் நிர்வாக தலைநகர், அமராவதியில் சட்டப்பேரவை தலைநகர் மற்றும் அமராவதியை கல்வி முனையமாக மாற்றவும், கர்னூலில் உயர்நீதிமன்றம் அமைக்கவும் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து முதல்வர் தலைமையில் ஆலோசித்து விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் விசாகப்பட்டினத்தில் நிர்வாக தலைநகரம் அமைப்பதற்காக அதிகாரிகள் தலைமை செயலகம், முதல்வர் அலுவலகம் அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்து வருகின்றனர்.

இதில் விசாகப்பட்டினத்தில் உள்ள ஐ.டி. ஹில்ஸ் பகுதியில் 2014ம் ஆண்டு மாநில அரசால் கட்டப்பட்ட இன்னோவேஷன் வேலி மற்றும் அதனை ஒட்டியுள்ள கட்டிடத்தில் தலைமைச் செயலகம் மற்றும் முதல்வர் அலுவலகம் அமைப்பதற்கு சரியாக இருக்கும் என அதிகாரிகள் தேர்ந்தெடுத்துள்ளனர். 4 ஏக்கரில் 50 ஆயிரம் சதுர பரப்பளவில் கட்டிடமும் 50,000 சதுர பரப்பளவில் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடமும் உள்ளதால் இந்த பகுதி தலைமை செயலகம் மற்றும் முதல்வர் அலுவலகத்திற்கு மிகவும் சரியானதாக இருக்கும் என தேர்ந்தெடுத்துள்ளனர். இன்னோவேஷன் வேலி கட்டிடம் சர்வதேச தரத்தில் உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் கட்டப்பட்டுள்ளதால் இந்த கட்டிடம் விரைவில் நிர்வாக தலைநகராக இங்கிருந்து செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பல்வேறு துறை அதிகாரிகள் இங்கு நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளனர். மேலும் விசாகப்பட்டினத்தை நிர்வாக தலைநகராக மாநில அரசு அறிவித்த உடனேயே தலைமை செயலகம் மற்றும் முதல்வர் அலுவலகம் இந்த கட்டிடத்தில் மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். இன்னோவேஷன் வேலியில் 8 மாடிகள் உள்ள நிலையில் 3 மாடிகளில் ஸ்டார்ட் அப் செயல்பட்டு வரக்கூடிய நிலையில் மீதமுள்ள 5 மாடி காலியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • ஜாமியா பல்கலைக்கழக வன்முறை: 70 பேரின் புகைப்படம் வெளியீடு... டெல்லி காவல்துறை அறிவிப்பு



  • அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் சபர்மதிக்கு டிரம்ப் வருகை: குஜராத் முதல்வர் தகவல்



  • டெல்லி பள்ளிகள் தொடர்பாக போலி வீடியோ பகிர்ந்த அமித்ஷா: தடை விதிக்க ஆம்ஆத்மி புகார்



  • டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு மம்தா கட்சி ஆதரவு: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவில்லை



  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: நாளை மறுநாள் மத்திய பட்ஜெட்



  • டிவி செய்தி ஆசிரியரிடம் வம்பிழுத்த காமெடி நடிகர் எங்க விமானத்தில் 6 மாசத்துக்கு ஏறாதீங்க..! 2 விமான நிறுவனங்கள் தடை விதித்ததால் பரபரப்பு



  • குடியுரிமை சட்டம் குறித்து வாசிக்க மறுப்பு கேரள கவர்னர் தடுத்து நிறுத்தம்: சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்துக் கிடக்கும் 80டன் நாணயம்: ஒரு டன் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை



  • இந்தியாவில் வைரஸ் தடுப்பு தீவிரம்



  • சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களுக்கு நிதியுதவி: குறிப்பிட்ட சமுதாய அமைப்பின் வங்கிக் கணக்கில் ₹120 கோடி டெபாசிட்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]