இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

அண்ணா பல்கலை. பெயரை மாற்றக்கூடாது: ஆசிரியர்கள் கூட்டமைப்பு கவர்னருக்கு கடிதம்

1/9/2025 3:24:58 PM
மகளின் பிறந்த நாளை கொண்டாட அழைத்து சென்று மிரட்டல்: பிணைக்கைதியாக அடைக்கப்பட்ட 23 குழந்தைகள் மீட்பு வேலை வாங்கி தருவதாக ₹95 லட்சம் மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற அனுமதிக்கக்கூடாது என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் தமிழக கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இதுதொடர்பாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் அண்ணா பல்கலைக்கழக வேந்தரும் தமிழக கவர்னருமான பன்வாரிலால் புரோகித்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:1978ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து தொழில்நுட்பம் சார் கல்லூரிகள் பிரிக்கப்பட்டு அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் கிண்டி பொறியியல் கல்லூரி, ஸ்கூல் ஆப் ஆர்க்கிடெக்சர் அன்ட் பிளானிங், அழகப்பா காலேஜ் அப் டெக்னாலஜி, மெட்ராஸ் இன்ஸ்ட்டிட்யூட் ஆப் டெக்னாலஜி, குரோம்பேட்டை ஆகிய 4 கல்லூரிகளில் அண்ணா பல்கலைக்கழகத்தின் துறைகளும், 13 உறுப்பு கல்லூரிகள், 3 பல்கலைக்கழக வளாகங்கள், 593 இணைவு பெற்ற கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன.  

பல்கலைக்கழகத்துக்கு தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இன்ஸ்டிட்யூட் ஆப் எமினென்ஸ் அந்தஸ்து வழங்கியுள்ளது. இதற்காக ஆராய்ச்சி பல்கலைக்கழகம், இணைவு அனுமதி வழங்கும் பல்கலைக்கழகம் என பல்கலைக்கழகம் இரண்டாக பிரிக்கப்பட உள்ளது. இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் அப்படியே வைக்கப்படுமா அல்லது இணைவு அதிகாரம் வழங்கும் பல்கலைக்கழகத்துக்கு வேறு பெயர் வைக்கப்படுமா என்ற பிரச்னை எழுந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது. அண்ணா பல்கலைக்கழகம்(இன்டிட்யூட் ஆப் எமினென்ஸ்) என்று ஆராய்ச்சி பல்கலைக்கழகம் செயல்பட வேண்டும். இணைவு அனுமதி வழங்கும் பல்கலைக்கழகத்துக்கு தமிழ்நாடு இன்ஜினியரிங் பல்கலைக்கழகம் என்று பெயர் வைக்கலாம்.
அண்ணா பல்கலைக்கழகத்தின் பெரை மாற்றுவது பல்கலைக்கழகத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும். இதுவரை பிரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே இருந்த பல்கலைக்கழகத்தின் பெயர் மாற்றப்படவில்ைல. அதே போல் ஐதராபாத் பல்கலைக்கழகம் உள்பட இன்ஸ்ட்டியூட் ஆப் எமினென்ஸ் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ள எந்த பல்கலைக்கழகத்தின் பெயரும் மாற்றப்படவில்லை. அதனால் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை அண்ணா பல்கலைக்கழகம்(இன்ஸ்டிட்யூட் ஆப் எமினென்ஸ்) என்று தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இவ்வாறு ஆசிரியர் கூட்டமைப்பினர் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. 

மேலும் சில
  • சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் நீதிபதிகள் பேரணி நடத்தியது துரதிஷ்டவசமானது: தலைமை நீதிபதி வேதனை



  • வேலை வாங்கி தருவதாக ₹95 லட்சம் மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை



  • பிப்ரவரி 5ம் தேதி குடமுழுக்கு தஞ்சை பெரியகோயிலில் நாளை யாகசாலை பூஜைகள் துவக்கம்



  • வங்கிகள் ஸ்டிரைக் தொடங்கியது: ரூ.23 ஆயிரம் கோடி பரிவர்த்தனை முடக்கம்



  • விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு



  • பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 அறைகள் இடிந்து தரைமட்டம்



  • ஆந்திரா பொன்னிரக நெல் விதை விற்பனையை தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்



  • குமரி எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: திருச்சூருக்கு அழைத்து சென்று தீவிரவாதிகளிடம் விசாரணை



  • சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா



  • திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பலராமன் எம்எல்ஏ இல்ல திருமணம் இன்று நடந்தது: முதல்வர் வாழ்த்து



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]