இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

காற்று மாசு குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு: மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஏற்பாடு

1/9/2025 3:03:09 PM
விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா

சென்னை: போகி பண்டிகையின் போது உருவாகும் காற்றுமாசு குறித்து மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:  நமது முன்னோர் பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும் புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகி பண்டிகையை கொண்டாடி வந்துள்ளனர். இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டு கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது. ஆனால் இன்றைய குழலை எடுத்துக் கொண்டால், தற்போது போகி பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருட்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுவதோடு அடர்ந்த புகைகாரணமாக விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.

சென்னையில் வாகன ஓட்டிகளுக்கு மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. மூச்சு திணறல், கண் எரிச்சல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் வகையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. சென்னையில் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு, வாரியம் போகிப்பண்டிகையின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகை நாளிலும் 15 இடங்களில் 24 மணிநேரமும் காற்றுத்தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. நேற்று காற்று மாசினைத்தடுக்கும் விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா நேற்று கிண்டியில் உள்ள மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் நடந்தது. இதில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது போகி உறுதிமொழியினை வாசித்து, விழிப்புணர்வு பிரச்சார வாகனங்களை கொடி அசைத்து துவங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவர்களிடையே போகி பண்டிகையின் போது ஏற்படும் காற்று மாசு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் சில
  • விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு



  • பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: 5 அறைகள் இடிந்து தரைமட்டம்



  • ஆந்திரா பொன்னிரக நெல் விதை விற்பனையை தடை செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு ஜி.கே.வாசன் வேண்டுகோள்



  • குமரி எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு: திருச்சூருக்கு அழைத்து சென்று தீவிரவாதிகளிடம் விசாரணை



  • சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா



  • திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சிறுணியம் பலராமன் எம்எல்ஏ இல்ல திருமணம் இன்று நடந்தது: முதல்வர் வாழ்த்து



  • அதிமுக பிரமுகரின் 3 கார்கள் உடைப்பு: வேளச்சேரியில் பரபரப்பு



  • மோடி ஆட்சியால் நாட்டுக்கு பேராபத்து: பாலகிருஷ்ணன் பேச்சு



  • காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் உள்ள பள்ளிக்கூடத்தில் கழிவுநீர் தேக்கம்



  • காட்டாங்கொளத்தூர் அருகே பரபரப்பு: போர்வெல் பணியை தடுப்பதா?.. திமுக-அதிமுகவினர் வாக்குவாதம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]