இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வரும் மகளை மீட்டுதரக்கோரி போலீசில் தந்தை கதறல்

1/8/2025 4:44:03 PM
சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம் தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் பகுதியில் தனது தோழியுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வரும் மகளை மீட்டு தரும்படி நேற்று திருமங்கலம் காவல் நிலையத்தில் அப்பெண்ணின் தந்தை கதறலுடன் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆனந்த் (44, பெயர் மாற்றப்பட்டு உள்ளது). சென்னையில் இவரது மகள் தனது உறவினர் வீட்டில் தங்கியிருக்கும்போது, அப்பகுதியை சேர்ந்த வேறொரு பெண்ணுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டு வந்துள்ளார். அவரை மீட்டு தரும்படி நேற்று திருமங்கலம் காவல் நிலையத்தில் நேற்று ஆனந்த் புகார் அளித்தார்.
 
தனது புகாரில், எனது மகள் பவித்ராவுக்கு (17, பெயர் மாற்றப்பட்டு உள்ளது) படிப்பு சரியாக வரவில்லை. இதனால் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள உறவினர் வீட்டில் தங்கவைத்தேன். அங்கிருந்து அவர், கடந்த சில மாதங்களாக நுங்கம்பாக்கத்தில் ஒரு தனியார் பயிற்சி மையத்தில் ஆடை வடிவமைப்பு குறித்து படித்து வந்துள்ளார். அப்போது அங்கு படித்த மற்றொரு பெண்ணுடன் பவித்ராவுக்கு ஓரினசேர்க்கை தொடர்பு ஏற்பட்டுள்ளது.   இதையடுத்து அவர் கடந்த சில நாட்களுக்கு முன் சைதாப்பேட்டை உறவினர் வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டார்.

அவரை தேடி வந்த நிலையில், அண்ணாநகர் மேற்கு பகுதியில் உள்ள பிரபல அமைப்பில் பவித்ரா கவுன்சிலிங் பெறுவதாக தெரியவந்தது. கடந்த 2 நாட்களுக்கு முன் அந்த அமைப்பிடம் எனது மகளை திருப்பி அனுப்பும்படி வலியுறுத்தியும், அவர்கள் என்னுடன் மகளை அனுப்ப மறுத்துவிட்டனர். மேலும், அவளுடன் தகாத உறவில் இருக்கும் பெண்ணும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். எனவே, நீங்கள் உரிய நடவடிக்கை எடுத்து, எனது மகள் பவித்ராவை மீட்டுத் தரவேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.   இப்புகாரின்பேரில் திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்ட அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் பவித்ராவுடன் தொடர்பு உள்ள மற்றொரு பெண்ணிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.    

மேலும் சில
  • சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம்



  • தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி



  • தமிழகத்தில் ஊரடங்கு டிச.31வரை நீட்டிப்பு; கல்லூரிகள் டிசம்பர் 7ல் திறப்பு: 14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி



  • சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு



  • தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது



  • வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு



  • மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி



  • தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு



  • 3வது நாளாக மிதக்கிறது சென்னை புறநகர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]