தொழிலதிபர் கடத்தல்?: கறம்பக்குடியில் பரபரப்பு
1/8/2025 4:42:22 PM
கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ரசூல் நகரை சேர்ந்தவர் கர்ணன். தொழிலதிபரான இவர் கறம்பக்குடியில் பெட்ரோல் பங்க் மற்றும் இரு சக்கர வாகனங்கள் விற்பனை நிறுவனங்களை நடத்தி வருகிறார். இவரது மகன் வீரபாண்டியன் (28). தந்தையுடன் இரு சக்கர வாகனம் விற்பனை நிலையத்தை பராமரித்து வருகிறார். கடந்த 4ம் தேதி இரவு 7 மணி அளவில் அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு திருமணஞ்சேரி கோயிலுக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் பதற்றம் அடைந்தனர்.
இதுகுறித்து கர்ணன் அளித்த புகாரின்படி, கறம்பக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வீர பாண்டியனை பணத்திற்காக யாரும் கடத்தினார்களா, முன்விரோதம் காரணமாக கடத்தினார்களா என பல்வேறு கோணத்தில் விசாரிக்கின்றனர்.