‘’முதலீடுக்கு இரட்டிப்பு பணம் தருவதாக ஆசை வார்த்தை’’ ஆன்லைன் வர்த்தக நிறுவனம் நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்தவர் கைது
1/8/2025 4:39:07 PM
கோவை: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூரை சேர்ந்தவர் போனி தாமஸ் (40). இவர் கடந்த 2 மாதத்துக்கு முன் கோவை காந்திபுரம் அலமு நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு எடுத்து தங்கி லிப்ரா இன்டர்நேஷனல் டிரேடிங் கம்பெனி என்ற பெயரில் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தொடங்கினார். இந்த நிறுவனத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், நீங்கள் கொடுக்கும் பணத்தை தங்கம், ஷேர்மார்க்கெட், கரன்சி போன்ற வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்தால், வீட்டில் இருந்தபடியே தினமும் 2500 ரூபாய் சம்பாதிக்கலாம். இந்த திட்டம் 150 நாட்கள் மட்டுமே செயல்படும் என விளம்பரம் செய்திருந்தார்.
இதை நம்பி ரூ.200க்கும் மேற்பட்டோர் ரூ.1 கோடி வரை முதலீடு செய்தனர். முதலீடு செய்தவர்களுக்கு தினமும் ரூ.2500 கொடுத்துள்ளார். இந்த நிலையில் அந்நிறுவனத்தில் முதலீடு செய்த போத்தனூர் சாரதா மில் ரோட்டை சேர்ந்த மெடிக்கல் ரெப் தில்லைக்கரசன் (29) என்பவருக்கு 19 நாளாக வட்டி தொகை கொடுத்துள்ளார். 20வது நாள் வட்டி தொகை கொடுக்கவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்க தில்லைகரசன் வர்த்தக நிறுவனத்துக்கு சென்றார். அப்போது அலுவலக கதவு பூட்டப்பட்டிருந்தது. மேலும் அவரை தொடர்பு கொண்டபோது செல்போனில் இணைப்பு கிடைக்கவில்லை.இதற்கிடைய போனி தாமஸ் சாய்பாபா காலனியில் உள்ள ஒரு வங்கியில் பதுங்கி இருப்பதாக தில்லைகரசனுக்கு தகவல் கிடைத்து. தில்லைகரசனை பார்த்ததும், போனிதாமஸ் தப்பியோட முயன்றார். அப்போது போனி தாமசிடம் பணம் கட்டி ஏமாந்தவர்களும் அங்கு வந்தனர். அவர்களுடன் தில்லைகரசன், போனி தாமசைபிடித்து காட்டூர் போலீசில் ஒப்படைத்தார். இதுகுறித்து தில்லைகரசன் கொடுத்த புகாரின்படி, போலீசார் விசாரித்து போனிதாமசை கைது செய்து விசாரித்ததில், ‘’200 பேரிடம் ரூ. 1 கோடி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.