இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

20ம் தேதி கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடங்குமா? மெல்போர்னை மிரட்டும் ‘புஷ்ஃபயர்ஸ்’: காட்டுத்தீயின் புகை மூட்டத்தால் நிர்வாகிகள் குழப்பம்

1/8/2025 4:36:21 PM
விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா

சிட்னி: ஆடவர்  உலகக் கோப்பை எனப்படும் ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டிகள் இத்தாலி,  ஆஸ்திரேலியா, ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்று  வருகின்றன. 5ம் நாளான நேற்று பெர்த் நகரில் ரஷியா 3-0 என்ற செட் கணக்கில்  நார்வேயை வீழ்த்தியது. ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் காஸ்பர் ரூடை வென்றார்.  மற்றொரு ஆட்டத்தில் காரன் கச்சனோவ் 6-2, 6-1 என டுராஸோவிக்கை  வீழ்த்தினார். ஆஸ்திரேலியா மற்றும் கிரீஸ் அணிகள் இடையிலான  ஆட்டத்தில் உலகின் 6ம் நிலை கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸை 7-6, 6-7, 7-6 என்ற  செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸ் போராடி வென்றார். கனடா 2-1  என ஜெர்மனியையும், ஆஸ்திரேலியா 3-0 என கிரீசையும், இத்தாலி 2-0 என  அமெரிக்காவையும், பிரிட்டன் 3-0 என மால்டோவாவையும், பெல்ஜியம் 2-1 என  பல்கேரியாவையும் வீழ்த்தின. இப்போட்டியில் ரஷியா, இத்தாலி, ஆஸ்திரேலியா  அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இந்நிலையில், 2020ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் வருகிற 20ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள புஷ்ஃபயர்ஸ் என்ற காட்டுத்தீயில் இருந்து வெளியேறும் புகை, ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தாமதப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து, ஏடிபி பிளேயர்ஸ் கவுன்சிலின் தலைவர் நோவக் ஜோகோவிச் கூறுகையில், ‘‘நிலைமை மேம்படவில்லை என்றால், போட்டியை தாமதப்படுத்துவதை அமைப்பாளர்கள் பரிசீலிக்க வேண்டும்’’ என்றார். ஆனால், ஆஸ்திரேலியா டென்னிஸ் தலைவர் கிரேக் டைலி, ‘‘புஷ்ஃபயர்ஸில் இருந்து வரும் புகை ஆஸ்திரேலிய ஓபனை பாதிக்குமா என்பது பற்றி நிறைய ஊகங்கள் உள்ளன. கிராண்ட்ஸ்லாம் திட்டமிட்டபடி நடத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறோம். நெருங்கிய தீ நகரத்திலிருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. எந்தவொரு புகை அபாயங்களும், ஆபத்தானது என்று உறுதியான தகவலாக தெரிவித்தால் நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்த முடியும்.ஆனால் மெல்போர்ன் பூங்காவில் மூன்று கூரை அரங்கங்களும் மற்ற எட்டு உட்புற அரங்குகளும் இருப்பதால் பாதுகாப்பு வசதிகள் உள்ளன’’ என்றார்.

மேலும் சில
  • டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: முதல் இடத்தில் ஹிட் மேன் ரோஹித்



  • தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர்: காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்



  • ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: ஒடிசாவை வீழ்த்தியது கோவா



  • முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் திடீர்னு வேண்டாம்னா எப்படியிருக்கும்?.. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் மகிழ்ச்சி



  • எனக்கு ரோல் மாடல் ரோஹித்: பாகிஸ்தான் இளம் வீரர் விருப்பம்



  • 100 சதவீத பங்களிப்பு முக்கியம் வெற்றி, தோல்வி சகஜம்: பேட்மிண்டன் வீராங்கனை கருத்து



  • ஒரு சீட் எப்போதும் காலியாக உள்ளது அவரை நாங்க மிஸ் பண்றோம்..! தோனி குறித்து சாஹல் நெகிழ்ச்சி



  • பாகிஸ்தானுக்கு வந்து ஆடமுடியாது அப்ப நீங்க... இப்ப நாங்க..! ஆசிய கோப்பையை நடத்துவதில் குழப்பம்



  • நாளை முதல் டி20 போட்டி: ‘சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்துவது கடினம்’... முன்னாள் பயிற்சியாளர் ஹெசன் பேட்டி



  • ‘நான் என்ற வார்த்தைக்கு இடமில்லை’.. ரவி சாஸ்திரி பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]