இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

வீடியோ காலில் சிறுமியை ஆபாச படம் பிடித்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல்

1/7/2025 3:11:32 PM
கேரளா உட்பட 16 மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 900 பேர் பலி; மேற்குவங்கத்தில் மட்டும் 239 பேர் மரணம் மூணாறு நிலச்சரிவு பலி 27 ஆக உயர்வு 3-வது நாளாக இன்றும் மீட்புபணி தீவிரம்; 19 பள்ளி மாணவர்களின் கதி என்ன?

தண்டையார்பேட்டை: விருதுநகர் மாவட்டம் பள்ளப்பட்டி ராஜன் தெருவை சேர்ந்த சாய் என்ற ராஜசிவசுந்தர் (29). பிடெக் பட்டதாரியான இவர், சென்னை கோயம்பேடு, திருமுல்லைவாயல், ஆவடி, மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். செல்போனில் கேம் விளையாடும்போது வண்ணாரப்பேட்டை சீனிவாசபுரத்தை சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் ராஜசிவசுந்தருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, தனது பெயர் சந்துரு என்றும் பிளஸ் 2 பிடித்து வருவதாக கூறி அந்த சிறுமியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார். அதன்படி இருவரும் காதலித்து வந்துள்ளனர். பல நாட்கள் ஆனதும் வீடியோ காலில் ஆடையின்றி போஸ் கொடுக்கும்படி சிறுமியிடம் கூறியுள்ளார். காதலன்தானே என நினைத்து சிறுமி ஆடையின்றி வீடியோ காலில் போஸ் கொடுத்துள்ளார். அதை செல்போனில் ராஜசிவசுந்தர் பதிவு செய்துள்ளார்.

சில நாட்கள் கழித்து சென்னை வந்த ராஜசிவசுந்தர், சிறுமியை கோயம்பேடு வரும்படி கூறியுள்ளார். ஆனால் சிறுமி அங்கு செல்லவில்லை. இதனால் கோபமடைந்த ராஜசிவசுந்தர், வீடியோ காலில் எடுத்த சிறுமியின் ஆபாச படத்தை சிறுமி செல்போனில் அனுப்பி மிரட்டியுள்ளார். இதனால் சந்தேகமடைந்த சிறுமி இதுகுறித்து தனது தாயிடம் கூறியுள்ளார். இதையடுத்து, சிறுமியின் தாய், செல்போனில் ராஜசிவசுந்தரிடம் பேசினார். அப்போது, 5 லட்சம் ரூபாய் தந்தால் ஆபாச படத்தை அழித்துவிடுகிறேன் என கூறியுள்ளார். அவ்வளவு பணம் எங்களிடம் இல்லை, பணத்தை புரட்டி தருகிறோம் என கூறியுள்ளனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் வண்ணாரப்பேட்டை போலீசில் சிறுமியின் பெற்றோர் புகார் செய்தனர். அதன்படி வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சுப்புலட்சுமி உத்தரவின்பேரில் வண்ணாரப்பேட்டை உதவி ஆணையர் ஜுலியர்சீசர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையில் தனிப்படை அமைத்து தேடினர். பின்னர், சிறுமியின் சித்தப்பா பேசுவதாக ராஜசிவசுந்தரிடம் செல்போனில் போலீசார் பேசியுள்ளனர். அப்போது, பணத்தை எங்கு வைத்து தரவேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு கோயம்பேடு வரும்படி ராஜசிவசுந்தர் கூறியுள்ளார். அதன்படி போலீசார் கோயம்பேடு சென்றனர். அங்கு ராஜசிவசுந்தரை மடக்கிபிடித்து விசாரித்தனர். பின்னர் அவரிடமிருந்து 3 செல்போன், ஒரு லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் 11 பெண்களை ஆபாச படம் எடுத்து ஏமாற்றி பணம் பறித்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ராஜசிவசுந்தரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் சில
  • திருத்தணி அருகே பணம் வசூலிக்க சென்ற பெண் விஷம் ஊற்றி கொடூர கொலை: சவுக்குத் தோப்பில் சடலம் மீட்பு



  • அடுக்குமாடி குடியிருப்பு வீட்டில் பணம் வைத்து சூதாட்டம்: நடிகர் ஷாம் உள்பட 13 பேர் அதிரடி கைது



  • மதுரை ஜிஹெச்சில் பயங்கரம்; நோயாளி சரமாரி வெட்டிக்கொலை: மர்ம கும்பல் வெறிச்செயல்



  • காதல் திருமணம் செய்ததால் இளம்பெண் காரில் கடத்தல்: தந்தை, தாய் உட்பட 3 பேர் மீது வழக்கு



  • வெடிகுண்டு வீசியும் சரமாரி வெட்டியும் பிரபல ரவுடி படுகொலை: புதுச்சேரியில் பயங்கரம்



  • வேளச்சேரி அருகே கால்டாக்சி டிரைவர் வெட்டி கொலை: ஒருவர் கைது



  • ‘கள்ளக்காதலி மாதிரி நீ அழகாக இல்லை’ புதுப்பெண்ணை அடித்து சித்ரவதை: கொடூர இன்ஜினியர் கைது



  • ஆந்திராவில் இருந்து கடத்தி வந்து அனகாபுத்தூரில் கஞ்சா விற்பனை; 4 பேர் கைது



  • ஆவடி அருகே மீன் வியாபாரி கொடூர கொலையில் 3 பேர் கைது: பிரபல ரவுடிக்கு வலை



  • திருமுல்லைவாயலில் இன்று காலை மீன் வியாபாரி சரமாரி வெட்டி படுகொலை: 2 நண்பர்களுக்கு வலை வீச்சு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]