குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெரம்பூரில் 2 ஆயிரம் பேர் பேரணி
1/7/2025 3:00:17 PM
பெரம்பூர்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக பெரம்பூரில் நடந்த பேரணியில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பூர் சுற்று வட்டார மஸ்ஜிஸ்த்களின் கூட்டமைப்பு சார்பில், மாபெரும் பேரணி பெரம்பூரில் இன்று நடந்தது.
பெரம்பூர் பேப்பர் மில் சாலை காந்தி சிலையில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் ஊர்வலமாக சென்றனர். அப்போது அவர்கள், ‘’ குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும் இந்த சட்டத்தை திரும்ப வேண்டும் என்றும் கோஷங்கள் எழுப்பினர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற கோரி வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி சென்றனர்.
அங்குள்ள முரசொலிமாறன் பூங்கா அருகே பேரணி சென்றபோது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பேரணியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன், பெரம்பூர் நிஜார், கொடுங்கை நஸ்ருதீன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.