இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

டெல்லியில் மீண்டும் ஆம்ஆத்மி ஆட்சி? கருத்துக் கணிப்பு முடிவில் தகவல்

1/7/2025 2:38:34 PM
வருமான வரியில் 6 ஆண்டுகளில் பா.ஜ. அரசு செய்த மாற்றங்கள் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டாம் மோடி ஒரு 24 காரட் தங்கம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

புதுடெல்லி: வருகிற பிப். 8ம் தேதி டெல்லி சட்டப் பேரவைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஆம்ஆத்மி கட்சியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்று, கருத்துக் கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்டப்பேரவையின் ஆயுட்காலம் 2020 பிப். 22ம் தேதியுடன் முடிகிறது. 2015ம் ஆண்டு இங்கு நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் ஆம்ஆத்மி கட்சி 67 இடங்களைப் பெற்று அபாரமாக வென்றது. பாஜக 3 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை. இம்முறை கெஜ்ரிவாலை மீண்டும் முதல்வராக்க ஆம் ஆத்மி கட்சி களம் இறங்கி தனது பிரசாரத்தை தொடங்கிவிட்டது. பாஜக முதல்வர் வேட்பாளரை இதுவரை அறிவிக்கவில்லை. பிரதமர் மோடியை முன்னிறுத்தியே பாஜக பிரசாரம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நேற்று டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நிருபர்களிடம் கூறுகையில், “70 தொகுதிகளை கொண்ட டெல்லி பேரவையின் பதவிக்காலம் பிப். 22ம் தேதியுடன் முடிவடைகிறது. டெல்லி சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக நான்கு கட்டமாக ஆய்வு நடத்தப்பட்டது. ஜன. 1ம் தேதி நிலவரப்படி 1.46 கோடி வாக்காளர்கள் உள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தலைமைச் செயலாளர், காவல்துறை ஆணையர் உள்ளிட்டோருடன் ஆலோசிக்கப்பட்டது. ஜன. 14ம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. பிப். 8ம் தேதி வாக்குப்பதிவும், 11ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும்” என்றார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே ஏபிபி நியூஸ்-சி வோட்டர் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்பின்படி, 70 இடங்களை கொண்ட டெல்லி சட்டசபையில் ஆம் ஆத்மி கட்சி 59 இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. பாஜக 8 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக அந்தக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும்கூட டெல்லியில் தொடரும் பல்வேறு போராட்டங்களால், அங்கு அரசியல் சூழல் அமைதியற்ற நிலையிலேயே நீடிக்கிறது. இதுகுறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், “ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையிலான அரசியலால் டெல்லியின் வளர்ச்சி தடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் (ஷீலா தீட்ஷித்) 15 ஆண்டுகளாக ஆட்சி நடத்தினார். அப்போது ஐந்து ஆண்டுகள் மத்தியில் பாஜக அரசுதான் இருந்தது. ஆனால் மாநிலத்தின் வளர்ச்சி பாதிக்கப்படவில்லை. மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்கு சதவீதம் 22 சதவீதமாகவும், ஆம் ஆத்மி கட்சியின் வாக்கு 18 சதவீதமாகவும் உள்ளது. தலைநகரில் குற்ற எண்ணிக்கை உயர்ந்துள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு மோசமான நிலைமைக்கு பாஜகவே காரணம்’’ என்றார்.

மேலும் சில
  • வருமான வரியில் 6 ஆண்டுகளில் பா.ஜ. அரசு செய்த மாற்றங்கள்



  • நோக்கத்தை சந்தேகிக்க வேண்டாம் மோடி ஒரு 24 காரட் தங்கம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு



  • 2020-2021ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது



  • ஜாமியா பல்கலைக்கழக வன்முறை: 70 பேரின் புகைப்படம் வெளியீடு... டெல்லி காவல்துறை அறிவிப்பு



  • அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் சபர்மதிக்கு டிரம்ப் வருகை: குஜராத் முதல்வர் தகவல்



  • டெல்லி பள்ளிகள் தொடர்பாக போலி வீடியோ பகிர்ந்த அமித்ஷா: தடை விதிக்க ஆம்ஆத்மி புகார்



  • டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு மம்தா கட்சி ஆதரவு: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவில்லை



  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: நாளை மறுநாள் மத்திய பட்ஜெட்



  • டிவி செய்தி ஆசிரியரிடம் வம்பிழுத்த காமெடி நடிகர் எங்க விமானத்தில் 6 மாசத்துக்கு ஏறாதீங்க..! 2 விமான நிறுவனங்கள் தடை விதித்ததால் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]