இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

முத்துப்பேட்டை தர்காவில் சந்தனக்கூடு ஊர்வலம் கோலாகலம்

1/6/2025 4:39:36 PM
சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம் தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் உள்ள சேக்தாவூது ஆண்டவர் தர்கா உலகப் புகழ்பெற்றதாகும். இந்த தர்காவிற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மட்டும் அல்லாமல் வெளிநாடுகளில் இருந்தும் தினமும் ஏராளமான இஸ்லாமியர், இந்துக்கள் என அனைத்து மதத்தினரும் வந்து செல்கின்றனர். மேலும்  சுற்றுலா தளமாகவும் திகழ்கிறது. புகழ்பெற்ற இந்த தர்காவின் பெரியகந்தூரி விழா ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக நடைபெறும்.  இந்த ஆண்டின் 718வது பெரிய கந்தூரி விழா  கடந்த 27ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தன. விழாவின் முக்கிய நாளான இன்று அதிகாலை சந்தன கூடு ஊர்வலம் கோலாகலமாக நடைபெற்றது. நேற்றிரவு  10.30 மணிக்கு தர்ஹா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாகிப் இல்லத்தில் வைக்கப்பட்ட சந்தனங்கள் நிரப்பிய குடங்களை தர்காவிற்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி நடந்தது.

நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு தொழுகை நடந்தது. அதனை தொடர்ந்து நள்ளிரவு 2.30 மணிக்கு தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர்அலி சாகிப் தலைமையில் டிரஸ்டிகள் புனித சந்தன குடத்தை தலையில் சுமந்து வந்து கண்ணாடிகளால் அலங்கரிக்கப்பட்ட சந்தனக்கூட்டில் வைத்து வாணவேடிக்கை, மேள தாளங்களுடன் சந்தனக்கூடு ஊர்வலம் துவங்கியது.
சந்தனக்கூடு ஊர்வலம் அடக்கஸ்தலம் சென்று பின்னர் ஆற்றங்கரை பாவா தர்கா, அம்மா தர்கா பகுதிக்கு சென்று மீண்டும் தர்காவை மூன்று முறை வலம் வந்தது. அங்கு திரண்ட அனைத்து தரப்பு மக்களும் பூக்களை வாங்கி தங்களின் வேண்டுதலை வேண்டி சந்தனக்கூடு மீது வீசி பிராத்தனை செய்தனர்.

பின்னர் இன்று அதிகாலை 5 மணிக்கு சந்தன கூட்டிலிருந்து சந்தன குடங்கள் தர்காவிற்கு எடுத்து வரப்பட்டு  ஷேக்தாவூது ஆண்டவர் சமாதிக்கு புனித சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இஸ்லாமியர்கள் மட்டும்மின்றி அனைத்து தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.

மேலும் சில
  • சூடு பிடிக்கும் தேர்தல் களம்; தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ராகுல் காந்தி இன்று ஆலோசனை: சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து விவாதம்



  • தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்; இன்று காலை பவுன் ரூ400 குறைந்தது: ஒரு வாரத்தில் ரூ1792 சரிவு: நகை வாங்குவோர் மகிழ்ச்சி



  • தமிழகத்தில் ஊரடங்கு டிச.31வரை நீட்டிப்பு; கல்லூரிகள் டிசம்பர் 7ல் திறப்பு: 14ம் தேதி முதல் மெரினா கடற்கரை செல்ல அனுமதி



  • சென்னை புறநகர் பகுதிகளில் வடியாத வெள்ளம்... விடியாத சோகம்: வீடுகள் தீவானதால் மக்கள் பரிதவிப்பு



  • தென் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை: சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு



  • திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழா: அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது



  • வங்க கடலில் புதிய புயல் சின்னம் நாளை உருவாகிறது; டெல்டா மாவட்டங்கள் அருகே கரையை கடக்க வாய்ப்பு



  • மருத்துவமனையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 6 கொரோனா நோயாளிகள் தீயில் கருகி பலி



  • தங்கம் விலையில் தொடர் சரிவு: இன்று காலை சவரனுக்கு ரூ.296 குறைவு



  • 3வது நாளாக மிதக்கிறது சென்னை புறநகர்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]