இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

2 டிஐஜி, 14 எஸ்பிக்கள் உட்பட 19 சிபிஐ மூத்த அதிகாரிகள் இடமாற்றம்

1/3/2025 2:10:00 PM
விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா

புதுடெல்லி: சிபிஐ ஏஜென்சியில் பணியாற்றும் 2 டிஐஜி, 14 எஸ்பி உட்பட 19 மூத்த அதிகாரிகளை, சிபிஐ இயக்குனர் நேற்று அதிரடியாக இடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். சிபிஐ ஏஜென்சி சமீபத்தில் இடமாற்றம்  குறித்த தனது கொள்கையை புதுப்பித்துள்ளது, அதன்படி, எந்த அதிகாரியும் ஒரு  குறிப்பிட்ட கிளையில் ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் இருக்க மாட்டார்  என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிபிஐ இயக்குனர் ரிஷி குமார் சுக்லா, சிபிஐ அமைப்பின் மூத்த அதிகாரிகளை இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி இரண்டு டிஐஜி, 14 எஸ்பி-க்கள் உட்பட 19 மூத்த சிபிஐ அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார்.

முக்கிய இடமாற்றங்களில் விவேக் பிரியதர்ஷி (ஏ.ஐ.ஜி கொள்கை) ஜெய்ப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பிரியதர்ஷியின் இடத்தில் எஸ்.பி. பார்த்தா முகர்ஜி இருப்பார். இவர், கொல்கத்தாவை தளமாகக் கொண்ட பொருளாதார குற்றங்கள் - 4 மற்றும் சிட் ஃபண்ட் வழக்குகளை விசாரித்து வந்தார். சந்தா கோச்சர் வழக்கை 2019 ஜனவரி வரை விசாரித்த எஸ்.பி. சுதான்ஷு தார் மிஸ்ரா, அப்போதைய இடைக்கால சிபிஐ இயக்குனர் எம்.நாகேஸ்வர ராவ் வெளியேற்றப்படுவதற்கு முன்னர், டெல்லியில் உள்ள பொருளாதார குற்றங்கள் -2 பிரிவில் இப்போது பணியமர்த்தப்பட்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்பூர் இல்லத்தில் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணையை முன்னெடுத்து விசாரித்து வந்த துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் அபய் சிங், டெல்லியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இவர், தொடர்ந்து பாலியல் தொடர்பான விசாரணையை மேற்பார்வையிடுவார் என்று கூறப்பட்டுள்ளது. ஊழல் தடுப்பு பிரிவுக்கு தலைமை தாங்கும் டி.ஐ.ஜி நிதின் டீப் பிளாகனுக்கு ஊழல் தடுப்பு பிரிவு - 5 கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

பொருளாதார குற்றங்கள் - 3 பிரிவின் எஸ்.பி. விஜயேந்திர பிடாரி, இன்டர்போல் ஒருங்கிணைப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். மேலும் அவர், நிறுவனத்தின் அமைப்புகள் பிரிவையும் கவனிப்பார். அகஸ்டா வெஸ்ட்லேண்ட், விஜய் மல்லையா விசாரிக்கும் குழுவில் அங்கம் வகிக்கும் கிரண், ஏசி-4 அலகுக்கு மாற்றப்பட்டுள்ளார். எஸ்பிக்கள் பட்டியலில் அபிஷேக் துலார், அனூப் டி.மேத்யூ, ராஜ்பால் மீனா, ஏ.ஷியாஸ், ஏ.ஜெயதேவன், சுதான்ஷு தார் மிஸ்ரா, பி.கே.மஞ்சி, ஜெய் நாராயண் ராணா, சந்தானு கார் மற்றும் பி.கே.பாண்டே ஆகியோர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். கூடுதல் எஸ்.பி.க்கள் சஞ்சய் குமார் சின்ஹா, எஸ்.டி.மிஸ்ரா மற்றும் கஜானந்த் பைர்வா ஆகியோரும் வெவ்வேறு பிரிவுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில
  • ஜாமியா பல்கலைக்கழக வன்முறை: 70 பேரின் புகைப்படம் வெளியீடு... டெல்லி காவல்துறை அறிவிப்பு



  • அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் சபர்மதிக்கு டிரம்ப் வருகை: குஜராத் முதல்வர் தகவல்



  • டெல்லி பள்ளிகள் தொடர்பாக போலி வீடியோ பகிர்ந்த அமித்ஷா: தடை விதிக்க ஆம்ஆத்மி புகார்



  • டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு மம்தா கட்சி ஆதரவு: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவில்லை



  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: நாளை மறுநாள் மத்திய பட்ஜெட்



  • டிவி செய்தி ஆசிரியரிடம் வம்பிழுத்த காமெடி நடிகர் எங்க விமானத்தில் 6 மாசத்துக்கு ஏறாதீங்க..! 2 விமான நிறுவனங்கள் தடை விதித்ததால் பரபரப்பு



  • குடியுரிமை சட்டம் குறித்து வாசிக்க மறுப்பு கேரள கவர்னர் தடுத்து நிறுத்தம்: சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்துக் கிடக்கும் 80டன் நாணயம்: ஒரு டன் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை



  • இந்தியாவில் வைரஸ் தடுப்பு தீவிரம்



  • சிஏஏ எதிர்ப்பு போராட்டங்களுக்கு நிதியுதவி: குறிப்பிட்ட சமுதாய அமைப்பின் வங்கிக் கணக்கில் ₹120 கோடி டெபாசிட்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]