இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

2020 மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும்: மரியா ஷரபோவா உற்சாகம்

1/2/2025 4:51:12 PM
வருமான வரியில் 6 ஆண்டுகளில் பா.ஜ. அரசு செய்த மாற்றங்கள் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டாம் மோடி ஒரு 24 காரட் தங்கம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

பிரிஸ்பேன்: ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு, பிரிஸ்பேன் ஓபன் போட்டிகளில் ஆட வைல்ட் கார்ட் என்ட்ரி வழங்கப்பட்டுள்ளது. ‘மீண்டும் எனது  ரசிகர்களை சந்திக்கப் போகிறேன். 2020ம் ஆண்டு எனக்கும், எனது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும்’  என ஷரபோவா உற்சாகமாக  பேட்டியளித்துள்ளார்.
திறமையான வீராங்கனை, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முன்னணி வீராங்கனைகளுக்கு அச்சுறுத்தல் என வலம் வந்த மரியா ஷரபோவா, ஒரு கட்டத்தில்  டென்னிசை விட மாடலிங்கிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக இடம் பிடித்த ஷரபோவா, இன்னமும் எனக்கு திறமை  இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் இடை இடையே டென்னிஸ் போட்டிகளில் முத்திரை பதித்து வந்தார்.

கடந்த ஆண்டு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் உட்பட முன்னணி சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பெரும்பாலும் ஷரபோவா ஆடவில்லை. ஒன்றிரண்டு  போட்டிகளில் மட்டுமே தலை காட்டினார். அதிலும் பெரிய அளவில் வெற்றிகள் பெறவில்லை.இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அடுத்த வாரம் துவங்க உள்ள இந்த ஆண்டின் முதல் சர்வதேச டென்னிஸ் போட்டியான பிரிஸ்பேன்  ஓபனில், ஆடுவதற்கு அவருக்கு வைல்ட் கார்ட் என்ட்ரி வழங்கப்பட்டுள்ளது.பொதுவாக வைல்ட் கார்ட் என்ட்ரி (நேரடி அனுமதி) என்பது, தரவரிசையில் இடம் பெறாத, அதே சமயம் திறமையாக ஆடிவரும் வீரர்கள், வீராங்கனைகள்  சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பளிக்கும் வகையில் வழங்கப்படுகிறது. ஆனால் இதே பிரிஸ்பேனில் கடந்த 2015ம் ஆண்டு, மகளிர் ஒற்றையர் பட்டத்தை  வென்ற ஷரபோவாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு யு.எஸ்.கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இதே போல் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்தார் ஷரபோவா என்பது குறிப்பிடத்தக்கது. தனது இந்த என்ட்ரி குறித்து உற்சாகமாக பேட்டியளித்துள்ள ஷரபோவா, ‘மீண்டும் வருகிறேன். எனது ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறேன் என்பதில் எனக்கு  மகிழ்ச்சி. இந்த 2020ம் ஆண்டு எனக்கும், எனது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.தோள்பட்டை காயம் காரணமாக கடந்த ஆண்டு, பெரும்பாலான போட்டியில் ஷரபோவா ஆடவில்லை. இப்போது பிரிஸ்பேன் என்ட்ரி மூலம் வெளிச்சத்துக்கு  வந்துள்ளார். தொடர்ந்து இந்த ஆண்டு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஆடுவேன் என்று முன்னணி வீராங்கனைகளுக்கு ஷரபோவா மறைமுகமாக எச்சரிக்கை  விடுத்திருக்கிறார் என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

மேலும் சில
  • டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: முதல் இடத்தில் ஹிட் மேன் ரோஹித்



  • தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர்: காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்



  • ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: ஒடிசாவை வீழ்த்தியது கோவா



  • முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் திடீர்னு வேண்டாம்னா எப்படியிருக்கும்?.. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் மகிழ்ச்சி



  • எனக்கு ரோல் மாடல் ரோஹித்: பாகிஸ்தான் இளம் வீரர் விருப்பம்



  • 100 சதவீத பங்களிப்பு முக்கியம் வெற்றி, தோல்வி சகஜம்: பேட்மிண்டன் வீராங்கனை கருத்து



  • ஒரு சீட் எப்போதும் காலியாக உள்ளது அவரை நாங்க மிஸ் பண்றோம்..! தோனி குறித்து சாஹல் நெகிழ்ச்சி



  • பாகிஸ்தானுக்கு வந்து ஆடமுடியாது அப்ப நீங்க... இப்ப நாங்க..! ஆசிய கோப்பையை நடத்துவதில் குழப்பம்



  • நாளை முதல் டி20 போட்டி: ‘சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்துவது கடினம்’... முன்னாள் பயிற்சியாளர் ஹெசன் பேட்டி



  • ‘நான் என்ற வார்த்தைக்கு இடமில்லை’.. ரவி சாஸ்திரி பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]