இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

நடிகையுடன் நிச்சயதார்த்தம் ஹர்திக் பாண்டியாவுக்கு கோஹ்லி வாழ்த்து

1/2/2025 4:50:30 PM
விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா

மும்பை: நடிகையுடனான தனது நிச்சயதார்த்தத்தை அறிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு, கேப்டன் விராட்  கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்திய அணி ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா (26). முதுகில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு, தற்போது ஓய்வில் உள்ளார். அடுத்து  நியூசிலாந்து செல்ல உள்ள இந்தியா ஏ அணியில் இடம் பிடித்துள்ளார். அதில் தனது உடல் தகுதியை பரிசோதித்த பின்னர், மீண்டும் முழு வீச்சில் இந்திய  அணிக்கு அவர் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நேற்று தனது நிச்சயதார்த்த செய்தியை அவர் பதிவிட்டுள்ளார். செர்பியாவை சேர்ந்த நடிகை நடாசா  ஸ்டான்கோவிச்சுடன் தனக்கு திருமணமாக உள்ளது என்றும், அதற்கான எங்கேஜ்மென்ட் முடிந்துள்ளது என்பதை அறிவிக்கும் வகையிலும், அவருடன்  நெருக்கமாக உள்ள ஒரு புகைப்படத்தை பதிவிட்டு, ‘எனக்கு நீ... உனக்கு நான்... தேசத்துக்கே அது தெரியும் 01.01.2025 எங்கேஜ்டு’ என்ற தகவலை  பகிர்ந்துள்ளார். அவரது நிச்சயதார்த்த செய்தி ரசிகர்களிடையே வைரலாகி உள்ளது.

தற்போது மனைவி அனுஷ்காவுடன் நியூசிலாந்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் உள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, ஹர்திக்  பாண்டியாவின் இன்ஸ்டாகிராம் பதிவுக்கு உடனடியாக ரியாக்ட் செய்துள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவித்து விராட் கோஹ்லி தனது பதிவில், ‘வாழ்த்துக்கள்  ஹெச் (ஹர்திக்). உண்மையில் இது சந்தோஷமான செய்தி. கடவுளின் அருளால் உங்களுக்கு இன்பமான தருணங்கள் காத்திருக்கின்றன’ என்று கூறியுள்ளார். விராட் கோஹ்லியை தொடர்ந்து முன்னணி கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் ஹர்திக் பாண்டியாவுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் சில
  • டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: முதல் இடத்தில் ஹிட் மேன் ரோஹித்



  • தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர்: காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்



  • ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: ஒடிசாவை வீழ்த்தியது கோவா



  • முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் திடீர்னு வேண்டாம்னா எப்படியிருக்கும்?.. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் மகிழ்ச்சி



  • எனக்கு ரோல் மாடல் ரோஹித்: பாகிஸ்தான் இளம் வீரர் விருப்பம்



  • 100 சதவீத பங்களிப்பு முக்கியம் வெற்றி, தோல்வி சகஜம்: பேட்மிண்டன் வீராங்கனை கருத்து



  • ஒரு சீட் எப்போதும் காலியாக உள்ளது அவரை நாங்க மிஸ் பண்றோம்..! தோனி குறித்து சாஹல் நெகிழ்ச்சி



  • பாகிஸ்தானுக்கு வந்து ஆடமுடியாது அப்ப நீங்க... இப்ப நாங்க..! ஆசிய கோப்பையை நடத்துவதில் குழப்பம்



  • நாளை முதல் டி20 போட்டி: ‘சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்துவது கடினம்’... முன்னாள் பயிற்சியாளர் ஹெசன் பேட்டி



  • ‘நான் என்ற வார்த்தைக்கு இடமில்லை’.. ரவி சாஸ்திரி பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]