சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
1/2/2025 4:49:26 PM
பெரம்பூர்: சென்னை ஓட்டேரி பகுதியை சேர்ந்தவர் கமலா (27,பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர், தலைமை செயலக காலனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தார். அதில், தனது உறவுக்கார 16 வயது சிறுமியை, அவளது தந்தையுடன் வேலை செய்யும் அதே பகுதியை சேர்ந்த அப்துல் பஷீர் (23) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமி சத்தம் போட்டதால் அப்துல் பஷீர் அங்கிருந்து தப்பினார்.
இதனால் மனமுடைந்த சிறுமி வீட்டில் இருந்த வார்னிஷை குடித்து தற்கொலைக்கு முயன்றாள். சிறுமியின் அத்தை சிறுமியை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு சிறுமி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே, உரிய விசாரணை நடத்தி அப்துல்பஷீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் கூறியுள்ளார். இதையடுத்து, தலைமை செயலக அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்துல் பஷீரை போக்சோ சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.