ஐசிஎப் ரயில்வே காலனியில் நர்ஸ் வீட்டில் 22 பவுன் திருட்டு
1/2/2025 4:41:08 PM
அண்ணாநகர்: கிறிஸ்துமஸ் கொண்டாடுவதற்கு சொந்த ஊருக்கு சென்ற நர்ஸ் வீட்டில் 22 பவுன் நகை திருடப்பட்டது.சென்னை ஐசிஎப், ரயில்வே காலனியில் வசிப்பவர் விஜி (48). இவர் ரயில்வே மருத்துவமனையில் நர்ஸாக பணியாற்றி வருகிறார்.குடும்பத்துடன் கடந்த ஒரு வாரத்துக்கு முன் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடுவதற்காக கேரளாவுக்கு சென்றார். அங்கிருந்து அனைவரும் நேற்றிரவு வீடு திரும்பினர்.
அப்போது தனது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 22 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.இதுகுறித்து ஐசிஎப் போலீசில் விஜி புகார் அளித்தார்.போலீசார் வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் நகைகளை கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.கடந்த ஆண்டு, ஜூலை மாதம் ஐசிஎப் மருத்துவமனையில் டாக்டராக பணிபுரியும் குமாரின் வீட்டை உடைத்து 70 சவரன் நகைகள் கொள்ளையடித்தனர்.