பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்
1/2/2025 4:35:55 PM
ஸ்ரீ நகர்: எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது. ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் கிருஷ்ண காதி செக்டாரில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. நேற்றிரவு சிறிய ரக ஆயுதங்கள் மூலமாக பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இந்த தாக்குதல் சுமார் 2 மணி நேரம் நடந்தது.