இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

பிரபல நடிகர் கலாபவன் மணி மரணம்: நீதிமன்றத்தில் சிபிஐ பரபரப்பு அறிக்கை

12/31/2019 4:51:29 PM
மகளின் பிறந்த நாளை கொண்டாட அழைத்து சென்று மிரட்டல்: பிணைக்கைதியாக அடைக்கப்பட்ட 23 குழந்தைகள் மீட்பு வேலை வாங்கி தருவதாக ₹95 லட்சம் மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை

திருவனந்தபுரம்: பிரபல நடிகர் கலாபவன் மணி மரணம் தொடர்பாக விசாரணை நடத்திய சிபிஐ, நீதிமன்றத்தில் பரபரப்பு அறிக்கை ஒன்றை தாக்கல் செய்துள்ளது. மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தவர் கலாபவன்மணி. தமிழில் விஜய் நடித்த புதிய கீதை, விக்ரம் நடித்த ஜெமினி உள்பட பல படங்களில் வில்லனாக நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கிலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கலாபவன்மணி மர்மமான முறையில் இறந்தார். இதையடுத்து கொச்சி அரசு மருத்துவமனையில் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது உடலில் மீத்தைல் ஆல்கஹால் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கலாபவன்மணி இறப்பதற்கு முன்பு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு மது விருந்தில் கலந்துகொண்டார். ஆகவே யாராவது மதுவில் விஷம் வைத்து கொன்று இருக்கலாமோ? என்ற சந்தேகம் எழுந்தது. இதுதொடர்பாக சாலக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இந்த விசாரணையில் கலாபவன்மணிக்கு ஏற்கனவே கல்லீரல் நோய் இருந்தது என்றும், அளவுக்கு அதிகமாக மது அருந்தியது தான் மரணத்துக்கு காரணம் என்றும் தெரியவந்தது. இருப்பினும் அவரது சாவில் மர்மம் இருப்பதாகவும், சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கலாபவன்மணியின் தம்பி மற்றும் உறவினர்கள் உள்பட பலரும் கேரள அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். இதுதொடர்பாக கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டது. அதன்படி கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிபிஐ விசாரணையை தொடங்கியது. இந்த விசாரணை அறிக்கை நேற்று, எர்ணாகுளம் தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், பிரபல நடிகர் கலாபவன்மணியின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை. அவருக்கு ஏற்கனவே கல்லீரல் நோய் பாதிப்பு இருந்துள்ளது. அளவுக்கு அதிகமாக மது அருந்தியதால் நோய் தீவிரமடைந்து மரணம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த 3 வருடமாக எழுந்த சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது



  • ஜாமியா பல்கலைக்கழக வன்முறை: 70 பேரின் புகைப்படம் வெளியீடு... டெல்லி காவல்துறை அறிவிப்பு



  • அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் சபர்மதிக்கு டிரம்ப் வருகை: குஜராத் முதல்வர் தகவல்



  • டெல்லி பள்ளிகள் தொடர்பாக போலி வீடியோ பகிர்ந்த அமித்ஷா: தடை விதிக்க ஆம்ஆத்மி புகார்



  • டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு மம்தா கட்சி ஆதரவு: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவில்லை



  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: நாளை மறுநாள் மத்திய பட்ஜெட்



  • டிவி செய்தி ஆசிரியரிடம் வம்பிழுத்த காமெடி நடிகர் எங்க விமானத்தில் 6 மாசத்துக்கு ஏறாதீங்க..! 2 விமான நிறுவனங்கள் தடை விதித்ததால் பரபரப்பு



  • குடியுரிமை சட்டம் குறித்து வாசிக்க மறுப்பு கேரள கவர்னர் தடுத்து நிறுத்தம்: சட்டசபையில் எதிர்க்கட்சிகள் அமளி



  • திருப்பதி ஏழுமலையான் கோயிலில் குவிந்துக் கிடக்கும் 80டன் நாணயம்: ஒரு டன் ரூ.30 ஆயிரத்துக்கு விற்பனை



  • இந்தியாவில் வைரஸ் தடுப்பு தீவிரம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]