இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி கோயிலில் அனைத்து சேவைகளும் ரத்து

12/31/2019 4:49:19 PM
வருமான வரியில் 6 ஆண்டுகளில் பா.ஜ. அரசு செய்த மாற்றங்கள் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டாம் மோடி ஒரு 24 காரட் தங்கம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

திருமலை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை வரை அனைத்து சேவைகளையும் முழுமையாக ரத்து செய்திருப்பதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசி மற்றும் ஆங்கில புத்தாண்டுக்கான ஏற்பாடுகள் குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் கூடுதல் செயல் அலுவலர் தர்மாரெட்டி நேற்று தேவஸ்தான விஜிலென்ஸ், போலீசார் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆங்கில புத்தாண்டு, வைகுண்ட ஏகாதசியையொட்டி  நேற்று(30ம்தேதி) முதல் நாளை (1ம்தேதி) வரை சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் வசதிக்காக அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர் செல்லும் தரிசனம், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான சிறப்பு தரிசனம், நன்கொடையாளர்களுக்கான முன்னுரிமை தரிசனம், ஆதார் அட்டை மூலம் வழங்கப்படும் சர்வ தரிசனம், மலைப்பாதையில் நடந்து வரும் பக்தர்களுக்கான திவ்யதரிசனம், அங்கபிரதட்சணை சேவை என அனைத்து சேவைகளும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் வைகுண்ட ஏகாதசி மற்றும் துவாதசியையொட்டி வரும் 5ம்தேதி முதல் 7ம் தேதி வரை அனைத்து முன்னுரிமை தரிசனங்களும், (ஆர்ஜித சேவை) கட்டண சேவைகள், சர்வ தரிசனம் (நேரம் ஒதுக்கீடு), திவ்யதரிசனம், அங்கபிரதட்சணம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது.

ஏற்கனவே 7ம் தேதி துவாதசிக்கான ரூ.300 சிறப்பு தரிசனத்திற்கான 5 ஆயிரம் டிக்கெட்டுகள் ஆன்லைனில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. வைகுண்ட ஏகாதசியையொட்டி அதிகாலை 2 மணி முதல் முக்கிய பிரமுகர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்பிறகு சாதாரண பக்தர்கள்அதிகாலை 5 மணி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். சுவாமி தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்காக நான்கு மாட வீதி, நாராயணகிரி தோட்டம் முதல் கல்யாண மேடை வரை சிறப்பு வரிசைகள் ஏற்பாடு செய்யப்பட்டு பக்தர்களுக்கு சுழற்சி முறையில் அன்ன பிரசாதம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் சில
  • வருமான வரியில் 6 ஆண்டுகளில் பா.ஜ. அரசு செய்த மாற்றங்கள்



  • நோக்கத்தை சந்தேகிக்க வேண்டாம் மோடி ஒரு 24 காரட் தங்கம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு



  • 2020-2021ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் விவசாயிகளுக்கு 15 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு: நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு



  • குடியரசு தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கியது



  • ஜாமியா பல்கலைக்கழக வன்முறை: 70 பேரின் புகைப்படம் வெளியீடு... டெல்லி காவல்துறை அறிவிப்பு



  • அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் சபர்மதிக்கு டிரம்ப் வருகை: குஜராத் முதல்வர் தகவல்



  • டெல்லி பள்ளிகள் தொடர்பாக போலி வீடியோ பகிர்ந்த அமித்ஷா: தடை விதிக்க ஆம்ஆத்மி புகார்



  • டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு மம்தா கட்சி ஆதரவு: காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவில்லை



  • நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: நாளை மறுநாள் மத்திய பட்ஜெட்



  • டிவி செய்தி ஆசிரியரிடம் வம்பிழுத்த காமெடி நடிகர் எங்க விமானத்தில் 6 மாசத்துக்கு ஏறாதீங்க..! 2 விமான நிறுவனங்கள் தடை விதித்ததால் பரபரப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]