இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.4 கோடி கஞ்சா பறிமுதல்

12/31/2019 4:36:05 PM
விஸ்வரூபம் எடுக்கும் குரூப் 2 தேர்வு முறைகேடு: உதவி ஆய்வாளர் சித்தாண்டி தலைமறைவு சிறப்பு பூஜைகளுடன் தஞ்சை பெரியகோயில் கோபுரத்தில் தங்க கலசம் பொருத்தப்பட்டது: பிப்ரவரி 5ல் குடமுழுக்கு விழா

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே எஸ்.பி.பட்டினத்தில் இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.4 கோடி மதிப்புள்ள கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் அதிரடியாக பறிமுதல் செய்தனர். தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் தீவிரமாக தேடுகின்றனர். ராமநாதபுரம் அருகே உள்ள எஸ்.பி.பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கஞ்சா கடத்த இருப்பதாக மண்டபம் சுங்கத்துறை கண்காணிப்பாளர் ஜோசப் ஜெயராஜுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை எஸ்.பி.பட்டிணம் கடற்கரை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். கடற்கரை பகுதி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதையறிந்த கடத்தல்காரர்கள், கஞ்சாவை கடற்கரையில் போட்டு விட்டு தப்பியோடி விட்டனர். கடற்கரையில் சாக்கு மூட்டைகளில் 11 பண்டல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 380 கிலோ கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.  பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை ராமநாதபுரத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் போலீஸ் செக் போஸ்ட்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு, கஞ்சா கடத்திய  கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சுங்கத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘எஸ்.பி.பட்டினம் கடற்கரையில் 380 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.4 கோடி. கஞ்சாவை கடத்தி வந்தவர்களை தீவிரமாக தேடி வருகிறோம்’’ என்றனர். கடந்த 25ம் தேதி இலங்கைக்கு கடத்துவதற்காக ராமேஸ்வரம் சிவகாமி நகர் பகுதியில் காரில் எடுத்து வந்த 80 கிலோ கஞ்சாவை சிறப்பு படை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஒரு வார இடைவெளியில் தற்போது ராமநாதபுரம் மாவட்டத்தில் மீண்டும் 380 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ராமேஸ்வரம் தீவுப்பகுதி மற்றும் ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இலங்கைக்கு கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவது, மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • திருச்சி பா.ஜ. நிர்வாகி கொலையில் 5 பேர் கைது



  • மகனின் காதலிக்கு தாலி கட்டி பலாத்காரம் செய்து சித்ரவதை: அமமுக பிரமுகர் அதிரடி கைது



  • வீட்டில் அடைத்து வைத்து சிறுமியை பலாத்காரம்: மாணவன் உட்பட 2 பேர் கைது



  • லஞ்சம் வாங்கி கைதான பெண் அதிகாரி சிறையில் அடைப்பு



  • ஆள்கடத்தல், வழிப்பறி வழக்கில் தொடர்பு: வியாசர்பாடி ரவுடிக்கு குண்டாஸ்



  • செங்கல்பட்டு அருகே வீட்டில் சூதாட்டம்: 7 பேர் கும்பல் கைது: 10 பவுன், ரூ50 ஆயிரம் பறிமுதல்



  • திருவள்ளூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்பனை: வாலிபர் கைது



  • விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்ததால் ஆத்திரம்: கோயிலில் சாமி தரிசனம் செய்த மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து... ஐடி ஊழியர் கைது



  • வண்ணாரப்பேட்டையில் பைக்கில் சென்றவரை தாக்கி செல்போன் பறிப்பு



  • 30க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் உரிமம் புதுப்பிப்பு: போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கையெழுத்தை போலியாக போட்ட தொழிலதிபர் கைது... மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]