இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

‘2020ம் ஆண்டில் ஓய்வு’..லியாண்டர் பயஸ் அறிவிப்பு

12/26/2019 3:43:31 PM
மகளின் பிறந்த நாளை கொண்டாட அழைத்து சென்று மிரட்டல்: பிணைக்கைதியாக அடைக்கப்பட்ட 23 குழந்தைகள் மீட்பு வேலை வாங்கி தருவதாக ₹95 லட்சம் மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடுகளில் சோதனை

சென்னை: ‘‘வரும் 2020ம் ஆண்டில் டென்னிஸ் போட்டிகளில் இருந்து எனது ஓய்வை அறிவிக்க உள்ளேன். எனவே 2020 நான் அனைவருக்கும் நன்றி சொல்லும் ஆண்டாக அமையும்’’ என்று இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ‘ட்வீட்’ செய்துள்ளார். இந்திய டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ், கடந்த 1991ம் ஆண்டு தனது முதலாவது சர்வதேச டென்னிஸ் போட்டியை துவக்கினார். தற்போது 46வது வயதில் உள்ள இவர், 18 இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.  தவிர கடந்த 1996ம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஒற்றையர் ஆட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
30 ஆண்டுகளாக இரட்டையர் போட்டிகளில் ஜொலித்து வருகிறார் பயஸ். 100க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகளுடன் இணைந்து இரட்டையர் போட்டிகளில் ஆடியுள்ள பயஸ், 54 பட்டங்களை வென்றுள்ளார். மேலும் டேவிஸ் கோப்பை போட்டிகளிலும் இரட்டையர் பிரிவில் 56 போட்டிகளில் ஆடி, அவற்றில் 43 போட்டிகளில் வெற்றி பெற்று, தனி முத்திரை பதித்துள்ளார்.

‘‘வரும் 2020ம் ஆண்டில் சர்வதேச மற்றும் அனைத்து விதமான டென்னிஸ் போட்டிகளில் இருந்து என்னுடைய ஓய்வை அறிவிக்க உள்ளேன். 2020ம் ஆண்டில் குறிப்பிட்ட சில டோர்னமென்ட்களை தேர்ந்தெடுத்து ஆட உள்ளேன். அவற்றில் ஆடுவதன் மூலம் சக வீரர்கள் மற்றும் நண்பர்களுடன் பிடித்த நாடுகளுக்கு பயணம் செய்து, இந்த ஆண்டை கொண்டாட உள்ளேன். அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டிய வேளை வந்து விட்டது. என்னுடைய இந்த சாதனைகளுக்கு எல்லாம் குடும்பத்தினரும், ரசிகர்களுமே காரணம் என்பதை நான் ஒவ்வொரு நொடியும் உணர்ந்திருக்கிறேன்’’ என்று பயஸ் தற்போது ‘ட்வீட்’ செய்துள்ளார்.

மகேஷ் பூபதியும், லியாண்டர் பயசும் இணைந்து ஆடவர் இரட்டையர் போட்டிகளில் பெரும் சாதனைகளை படைத்துள்ளனர். கடந்த 1999ம் ஆண்டு 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் ஆடவர் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிகளில் ஆடி, சர்வதேச டென்னிஸ் அரங்கை அதிர வைத்தனர். அந்த ஆண்டு விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் பட்டங்களை வென்று, ரசிகர்களின் இதயத்தில் இந்த ஜோடி இடம் பிடித்தது. இந்த ஜோடி 1997ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 26 இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில
  • டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள்: முதல் இடத்தில் ஹிட் மேன் ரோஹித்



  • தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டி20 தொடர்: காயம் காரணமாக ஜோஃப்ரா ஆர்ச்சர் விலகல்



  • ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: ஒடிசாவை வீழ்த்தியது கோவா



  • முழங்கையில் ஏற்பட்ட காயத்தால் திடீர்னு வேண்டாம்னா எப்படியிருக்கும்?.. ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற வீரர் மகிழ்ச்சி



  • எனக்கு ரோல் மாடல் ரோஹித்: பாகிஸ்தான் இளம் வீரர் விருப்பம்



  • 100 சதவீத பங்களிப்பு முக்கியம் வெற்றி, தோல்வி சகஜம்: பேட்மிண்டன் வீராங்கனை கருத்து



  • ஒரு சீட் எப்போதும் காலியாக உள்ளது அவரை நாங்க மிஸ் பண்றோம்..! தோனி குறித்து சாஹல் நெகிழ்ச்சி



  • பாகிஸ்தானுக்கு வந்து ஆடமுடியாது அப்ப நீங்க... இப்ப நாங்க..! ஆசிய கோப்பையை நடத்துவதில் குழப்பம்



  • நாளை முதல் டி20 போட்டி: ‘சொந்த மண்ணில் நியூசிலாந்தை வீழ்த்துவது கடினம்’... முன்னாள் பயிற்சியாளர் ஹெசன் பேட்டி



  • ‘நான் என்ற வார்த்தைக்கு இடமில்லை’.. ரவி சாஸ்திரி பேட்டி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]