தேர்தலுக்கு சப்ளை செய்ய மதுபாட்டில்களை கடத்திய அதிமுக பிரமுகர் கைது
12/19/2019 4:46:20 PM
சாயல்குடி: முதுகுளத்தூர் அருகே தேர்தலுக்காக கடத்தி வரப்பட்ட 957 மதுபாட்டிகளை பறிமுதல் செய்து, அதிமுக பிரமுகர், ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே விளங்குளத்தூரை சேர்ந்த அதிமுக பிரமுகர் மனைவி பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். இவர், தனது ஆதரவாளர்களுக்கு மது வழங்க நேற்று அதிமுக பிரமுகர் முத்துமணியிடம் மது வாங்கி வர பணம் கொடுத்து அனுப்பியதாக கூறப்படுகிறது. முத்துமணி காக்கூர் டாஸ்மாக் கடையில் ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பிலான 957 மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு ஆட்டோவில் வந்தார். இது பற்றிய தகவல் பேரில் முதுகுளத்தூர் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் வாகன சோதனையில் ஈடுபட்டார்.அப்போது புளியங்குடி அருகே வந்த ஆட்டோவை சோதனை செய்து 957 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, விளங்குளத்தூரை சேர்ந்த பாலுச்சாமி(25), அதிமுக பிரமுகர் முத்துமணி (45) ஆகியோரை கைது செய்தனர்.