இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

பெண் டாக்டர் கொலை வழக்கில் என்கவுன்டர்: மனித உரிமைகள் ஆணையத்தில் விசாரணை அறிக்கை ஒப்படைப்பு

12/12/2025 3:03:03 PM
வருமான வரியில் 6 ஆண்டுகளில் பா.ஜ. அரசு செய்த மாற்றங்கள் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டாம் மோடி ஒரு 24 காரட் தங்கம்: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

திருமலை: தெலங்கானாவில் கால்நடை மருத்துவர் டிஷாவை எரித்துக்கொன்ற குற்றவாளிகளை என்கவுன்டர் செய்தது குறித்து நடத்திய விசாரணை அறிக்கையை மனித உரிமை ஆணையத்தில் இன்று அதன் பிரதிநிதிகள் ஒப்படைக்கின்றனர்.
தெலங்கானா மாநிலம் செம்ஷாபாத்தை சேர்ந்த கால்நடை டாக்டர் டிஷாவை பலாத்காரம் செய்து பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற முகமதுஆரீப், சிவா, நவீன், சென்னகேசவலு ஆகிய 4 பேரை போலீசார் என்கவுன்டர் செய்தனர். இதுகுறித்து ஊடக காட்சிகளின் ஆதாரப்படி மனித உரிமை ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டது. அதன்படி டெல்லி மனித உரிமை ஆணைய பிரதிநிதிகள் 7 பேர் கொண்ட குழுவினர், கடந்த 5 நாட்களாக விசாரணை நடத்தினர்.

இதில் என்கவுன்டர் நடந்த சட்டான்பள்ளி மேம்பாலம், டிஷா பலாத்காரம் செய்யப்பட்ட தொண்டபள்ளி சுங்கச்சாவடி, எரித்துக்கொல்லப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். மேலும் போலீசார், பிரேத பரிசோதனை செய்த டாக்டர்கள், என்கவுன்டரில் பலியானோரின் பெற்ேறார், உறவினர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலமாக சேகரித்தனர். தடயவியல் ஆய்வும் மேற்கொண்டனர்.

அதேபோல் என்கவுன்டர் சம்பவத்தின்போது காயம் அடைந்த தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 2 போலீஸ்காரர்களையும் சந்தித்து விவரங்களை சேகரித்தனர். இதையடுத்து 5 நாட்கள் நடந்த விசாரணை அறிக்கையை தயார் செய்தனர். பின்னர் விசாரணை முடிந்து மனித உரிமைகள் ஆணைய குழுவினர் நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். இந்த அறிக்கை இன்று மனித உரிமைகள் ஆணையத்தில் ஒப்படைக்கப்படுகிறது. தற்போது என்கவுன்டர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கிற்கு தேவைப்படும் பட்சத்தில், இந்த அறிக்கையை மனித உரிமைகள் ஆணையம் சமர்ப்பிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் சில
  • திருச்சி பா.ஜ. நிர்வாகி கொலையில் 5 பேர் கைது



  • மகனின் காதலிக்கு தாலி கட்டி பலாத்காரம் செய்து சித்ரவதை: அமமுக பிரமுகர் அதிரடி கைது



  • வீட்டில் அடைத்து வைத்து சிறுமியை பலாத்காரம்: மாணவன் உட்பட 2 பேர் கைது



  • லஞ்சம் வாங்கி கைதான பெண் அதிகாரி சிறையில் அடைப்பு



  • ஆள்கடத்தல், வழிப்பறி வழக்கில் தொடர்பு: வியாசர்பாடி ரவுடிக்கு குண்டாஸ்



  • செங்கல்பட்டு அருகே வீட்டில் சூதாட்டம்: 7 பேர் கும்பல் கைது: 10 பவுன், ரூ50 ஆயிரம் பறிமுதல்



  • திருவள்ளூர் அருகே போலி ஆவணங்கள் தயாரித்து நிலம் விற்பனை: வாலிபர் கைது



  • விவாகரத்து கேட்டு மனுத்தாக்கல் செய்ததால் ஆத்திரம்: கோயிலில் சாமி தரிசனம் செய்த மனைவிக்கு சரமாரி கத்திக்குத்து... ஐடி ஊழியர் கைது



  • வண்ணாரப்பேட்டையில் பைக்கில் சென்றவரை தாக்கி செல்போன் பறிப்பு



  • 30க்கும் மேற்பட்ட பெட்ரோல் பங்க் உரிமம் புதுப்பிப்பு: போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் கையெழுத்தை போலியாக போட்ட தொழிலதிபர் கைது... மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அதிரடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]