ரஷ்யா மீதான தடையை தொடர்ந்து இந்தியாவில் 150 வீரர்களுக்கு சிக்கல்: ஊக்க மருந்து தடுப்பு தூதராக நடிகர் நியமனம்
12/11/2025 3:52:54 PM
புதுடெல்லி: உலக ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் மூலம் ரஷ்யா நாட்டிற்கு நான்கு ஆண்டுகள் அனைத்துவிதமான போட்டிகளிலும் விளையாடத் தடை விதித்த சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பைக் கிளப்பியது. மேலும் அந்த அமைப்பு அனைத்து நாடுகளின் வீரர்களுடைய ஊக்க மருந்து சோதனை விவரங்களை தங்களிடம் ஒப்படைக்கும் படியும் உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இந்நிலையில், இந்தியாவில் இந்த ஆண்டு மட்டும் 150க்கும் மேற்பட்ட வீரர்கள் ஊக்கமருந்து சோதனையில் சிக்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக பாடி பில்டிங் பிரிவைச் சேர்ந்த வீரர்களே ஏராளம். இவர்கள், சர்வதேச போட்டிகளில் தகுதி பெறுவார்களா என்ற அச்சமும் நிலவி வருகிறது.
அதனால், வீரர்களின் ஊக்கமருந்து ெதாடர்பான பரிேசாதனைகள் தீவிரமாக நடக்கின்றன. டோக்கியோவில் நடக்கும் ஒலிம்பிக் தொடருக்கு எட்டு மாதங்களே உள்ள நிலையில் மீதமுள்ள வீரர்களின் ஊக்க மருந்து பரிசோதனைகள் நிறைவடையுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் தேசிய ஊக்க மருந்து தடுப்பு அமைப்பின் விளம்பரத் தூதராக பிரபல பாலிவுட் நடிகரான சுனில் ஷெட்டியை அந்த அமைப்பு நியமித்துள்ளது.