கார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு: பல்லடம் அருகே பரபரப்பு
12/11/2025 3:49:01 PM
பொங்கலூர்: பல்லடம் அருகே கார் மீது பெட்ரோல் குண்டு வீசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஆறாக்குளத்தை சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மகன் ஆனந்தகுமார் (26). இவர் தனியார் பால் நிறுவனத்தில் மேலாளராக உள்ளார். நேற்று அதிகாலை சுமார் 3 மணியளவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் ஆனந்தகுமார் வீட்டு கதவை திறந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது வீட்டுக்கு முன் நிறுத்தியிருந்த தனது கார் தீப்பிடித்து எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.. உடனடியாக தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைத்தார்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் காமநாயக்கன்பாளையம் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். ‘’ஆனந்தகுமார் எந்த கட்சியிலும் இல்லை. சொத்து தகராறு அல்லது முன்விரோதம் காரணமாக யாராவது இப்படி செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரித்து வருகிறோம். மது பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீ பற்ற வைத்து கார் மீது வீசி உள்ளனர். கார் அருகில் கிடந்த தடயங்களை சேகரித்து விசாரித்து வருகிறோம்’ என்று போலீசார் தெரிவித்தனர்.