இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

சுவர் இடிந்து விழுந்து 17 பேர் பலி: துணிக்கடை உரிமையாளர் ஜாமீன் மனு தள்ளுபடி

12/11/2025 3:47:20 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

கோவை: மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த வழக்கில் துணிக்கடை அதிபரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த நடூர் கிராமத்தில் கடந்த வாரம் 20 அடி உயரத்திற்கு கட்டப்பட்டிருந்த சுற்றுச்சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்ததில் மாணவிகள் உள்பட 17 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து துணிக்கடை அதிபர் சிவசுப்பிரமணியத்தை கைது செய்தனர். இதையடுத்து கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த நிலையில், ஜாமீன் கேட்டு கோவை மாவட்ட நீதிமன்றத்தில் சிவசுப்பிரமணியன் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தபோது உரிமையாளர் சிவசுப்பிரமணியன் தரப்பு வக்கீல் வாதிடுகையில், ‘’சிறையில் உள்ள சிவசுப்பிரமணியத்தின் உடல்நிலை மோசமாக உள்ளது.

எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தரப்பு வக்கீல், ‘’சம்பவ பகுதியில் போதிய அஸ்திவாரம் இல்லாமல் 20 அடி வரை சுவர் எழுப்பியது தவறு. அஜாக்கிரதையால்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது, உடல்நிலை மோசமாக உள்ளது என்றால் அரசு மருத்துவமனையில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளது, அதனால் அவரை அங்ேகயே அனுமதித்து சிகிச்சை அளிக்கலாம். ஜாமீன் வழங்கக்கூடாது’’ என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட மாவட்ட முதன்மை நீதிபதி சக்திவேல், துணிக்கடை உரிமையாளரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.

மேலும் சில
  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



  • உரிமம் புதுப்பிக்க லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு; தலைமறைவானதால் கதவை உடைத்து ஆவணங்கள் பறிமுதல்; சீல் வைப்பு



  • காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் நாளை மறுநாள் 10ம் வகுப்பு ‘ரிசல்ட்’



  • கர்நாடக அணைகளில் 1 லட்சம் கனஅடி உபரிநீர் திறப்பு; மேட்டூர், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு



  • சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் 10ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி; ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் செயல்படலாம்; தமிழக அரசு அறிவிப்பு



  • ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் முடிவு; மகிந்த ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர்..ரணில் விக்ரமசிங்க படுதோல்வி



  • இன்ஜி. கல்லூரிகள் செப்.12ல் திறப்பு; உயர்கல்வித்துறை முடிவு...பள்ளிகள், கலைக்கல்லூரிகள் பற்றி முடிவு எடுக்கவில்லை



  • 2ம் ஆண்டு நினைவு தினம்; கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: கொரோனா முன்களப்பணியாளருக்கு நல உதவி வழங்கினார்



  • தங்கம் விலை கிடு, கிடு உயர்வு; பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]