இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவள்ளூர் அருகே ரயில்வே மேம்பால கட்டும் பணி இழுபறி: வாகன ஓட்டிகள் அவதி

12/11/2025 3:45:19 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் திட்ட காலம் முடிந்தும் ரயில்வே மேம்பால பணிகள் இழுபறியாகி வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியில் உள்ளனர். திருவள்ளூர்-பேரம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள கடம்பத்தூரில், ரூ.14.5 கோடி மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி, கடந்த 2016, ஜூனில் தொடங்கியது. அதில், நெடுஞ்சாலை பகுதியில் 25 பில்லர்கள், ரயில்வே பகுதியில் 4 பில்லர்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கின. இந்நிலையில், கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முதல் ரயில்வே கேட் வரை பில்லர்கள் அமைக்கும் பணிகள் நிறைவடைந்தது.

இதேபோல், கசவநல்லாத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி அருகிலிருந்து தொடங்கப்பட்ட மேம்பால பணிகள் ரயில்வே கேட் வரை நிறைவடைந்துள்ளது. இருபுறமும் உள்ள ரயில்வே கேட்களின் இடையே உள்ள ரயில்வே பகுதியில் பாலத்துக்கான பில்லர் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் பல மாதங்களாக நடந்து வருகிறது. இதனால், அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து மக்கள் கூறுகையில், ‘பாலம் பணிகள் துவங்கி 18 மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என கால வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டம் நிறைவு செய்ய வேண்டிய காலம் முடிந்து 2 ஆண்டுகளுக்கு மேலாகியும், பெரும்பாலான பணிகள் இன்னும் நடைபெறவில்லை.

நகரின் மையப்பகுதியில் பணி நடப்பதால், பல்வேறு வகையில் மக்களுக்கு அவதி ஏற்படுகிறது. எனவே, குறித்த காலத்துக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. எனினும், மற்ற பாலம் பணிகளை போலவே, ரயில்வே மேம்பால பணியும் இழுத்தடிக்கப்பட்டு வருவது, மக்களை அதிருப்தியடைய செய்துள்ளது. பஸ்கள் வந்து செல்வதில் சிரமம், போக்குவரத்து நெரிசல், பயணிகளுக்கு தேவையற்ற அலைச்சல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு வருவதால், கடம்பத்தூரில் மேம்பால பணியை விரைந்து முடிக்க, ரயில்வே மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

மேலும் சில
  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



  • உரிமம் புதுப்பிக்க லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு; தலைமறைவானதால் கதவை உடைத்து ஆவணங்கள் பறிமுதல்; சீல் வைப்பு



  • காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் நாளை மறுநாள் 10ம் வகுப்பு ‘ரிசல்ட்’



  • கர்நாடக அணைகளில் 1 லட்சம் கனஅடி உபரிநீர் திறப்பு; மேட்டூர், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு



  • சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் 10ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி; ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் செயல்படலாம்; தமிழக அரசு அறிவிப்பு



  • ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் முடிவு; மகிந்த ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர்..ரணில் விக்ரமசிங்க படுதோல்வி



  • இன்ஜி. கல்லூரிகள் செப்.12ல் திறப்பு; உயர்கல்வித்துறை முடிவு...பள்ளிகள், கலைக்கல்லூரிகள் பற்றி முடிவு எடுக்கவில்லை



  • 2ம் ஆண்டு நினைவு தினம்; கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: கொரோனா முன்களப்பணியாளருக்கு நல உதவி வழங்கினார்



  • தங்கம் விலை கிடு, கிடு உயர்வு; பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]