இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

எஸ்எஸ்என் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை

12/11/2025 3:44:44 PM
பதவியேற்று இன்றுடன் ஓராண்டு நிறைவு: காங். இடைக்கால தலைவராக சோனியா தொடர்வார்: கட்சியின் செய்தி தொடர்பாளர் தகவல் மூணாறு நிலச்சரிவு பலி 43 ஆக உயர்வு: 4வது நாளாக மீட்பு பணி

திருப்போரூர்: திருப்போரூர் அருகே பிரபல தனியார் பல்கலைக்கழக கல்லூரியில் நேற்று முதலாம் ஆண்டு படிக்கும் ஒரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி, நம்மாழ்வார் நகரை சேர்ந்தவர் ரமேஷ் தங்கதுரை (45). இவர், அப்பகுதியில் வேளாண் விதைபொருட்கள் விற்பனை செய்து வருகிறார். இவரது மகன் கிஷோர் (18). கடந்த மே மாதம் சென்னை அருகே திருப்போரூரில் உள்ள சிவ நாடார் பல்கலைக்கழகத்தில் உள்ள எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் கெமிக்கல் இன்ஜினியரிங்கில் கிஷோர் முதலாமாண்டு படிப்பில் சேர்ந்துள்ளார். மேலும், இக்கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதியில் வேறு பிரிவில் படிக்கும் 2 மாணவர்களுடன் கிஷோர் தங்கியிருந்தார். கடந்த 6-ம் தேதி கிஷோருடன் தங்கியிருந்த 2 மாணவர்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்தனர்.

இந்நிலையில், நேற்றிரவு 7 மணியளவில் கோவில்பட்டியில் இருந்து அவரது சகோதரர் பிரசாந்த், கிஷோருக்கு போன் செய்தார். அவரது அழைப்பை கிஷோர் எடுக்காததால், விடுதியில் தங்கியிருந்த தனது ஊரை சேர்ந்த 2 நண்பர்களுக்கு பிரசாந்த் போன் செய்து விசாரித்தார். இதையடுத்து, அந்த மாணவர் கிஷோரின் அறைக்கு சென்று பார்த்தார். கிஷோரின் அறை உள்பக்கமாக பூட்டியிருந்ததால் சந்தேகத்துடன் விடுதி வார்டனுக்கு தகவல் தெரிவித்தார். இரவு 11.30 மணியளவில் கிஷோரின் அறைக்கதவை உடைத்து விடுதி வார்டன் மற்றும் மாணவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அறையில் இருந்த ஜன்னலில் டவலால் தூக்கிட்ட நிலையில் கிஷோர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து கிஷோரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்ததும் திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன், எஸ்ஐ ராஜா, பெருமாள் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். கிஷோரின் சடலத்தை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இப்புகாரின்பேரில் திருப்போரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முதலாம் ஆண்டு மாணவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார் என தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • 10ம் வகுப்பு தேர்வு எழுதிய அனைத்து மாணவ மாணவிகளும் பாஸ்



  • தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்; தமிழகம் முழுவதும் சாலைகள் வெறிச்சோடின



  • உரிமம் புதுப்பிக்க லஞ்சம் கேட்ட பெண் அதிகாரி வீட்டில் விஜிலென்ஸ் ரெய்டு; தலைமறைவானதால் கதவை உடைத்து ஆவணங்கள் பறிமுதல்; சீல் வைப்பு



  • காலாண்டு, அரையாண்டு மதிப்பெண் அடிப்படையில் நாளை மறுநாள் 10ம் வகுப்பு ‘ரிசல்ட்’



  • கர்நாடக அணைகளில் 1 லட்சம் கனஅடி உபரிநீர் திறப்பு; மேட்டூர், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 45 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு



  • சென்னை உள்பட மாநகராட்சி பகுதிகளில் 10ம் தேதி முதல் வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி; ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளும் செயல்படலாம்; தமிழக அரசு அறிவிப்பு



  • ஆளுங்கட்சிக்கு ஆதரவாக தேர்தல் முடிவு; மகிந்த ராஜபக்சே மீண்டும் இலங்கை பிரதமர்..ரணில் விக்ரமசிங்க படுதோல்வி



  • இன்ஜி. கல்லூரிகள் செப்.12ல் திறப்பு; உயர்கல்வித்துறை முடிவு...பள்ளிகள், கலைக்கல்லூரிகள் பற்றி முடிவு எடுக்கவில்லை



  • 2ம் ஆண்டு நினைவு தினம்; கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: கொரோனா முன்களப்பணியாளருக்கு நல உதவி வழங்கினார்



  • தங்கம் விலை கிடு, கிடு உயர்வு; பவுன் ரூ.43 ஆயிரத்தை தாண்டியது



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]