செங்கல்பட்டு வடக்கு மாவட்ட அமமுக நிர்வாகிகள் நியமனம்: டிடிவி தினகரன் அறிவிப்பு
12/11/2025 3:01:03 PM
சென்னை: செங்கல்பட்டு வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகளாகவும், மாவட்ட சார்பு அணி செயலாளர்களாகவும், பகுதிக்கழகம், ஒன்றியக்கழகம், நகரக்கழகம், பேரூர் கழகம் ஆகியவற்றின் செயலாளர்களாகவும் மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் இன்று முதல் நியமிக்கப்பட்டுள்ளனர் என்று பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மாவட்ட அவைத் தலைவராக டி.சி. செல்லமணி, மாவட்ட செயலாளர் கரிகாலன், மாவட்ட இணைச்செயலாளர் உமாதேவி, மாவட்ட துணைசெயலாளர் உஷா ஏழுமலை, மாவட்ட துணை செயலாளர் வேம்பரசன், மாவட்ட பொருளாளர் சுதாகர் பொதுக்குழு உறுப்பினர்கள், சோழிங்கநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு செல்வம், ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி ரவி, பல்லாவரம் சட்டமன்ற தொகுதிக்கு வாசுதேவன், தாம்பரம் சட்டமன்ற தொகுதிக்கு சத்யா, மாவட்ட சார்பு அணி செயலாளர்கள், புரட்சி தலைவர் எம்ஜிஆர் மன்றம் செல்லப்பன்,
இதய தெய்வம் அம்மா ேபரவை அழகு சுப்ரமணியன், புரட்சித்தலைவர் எம்ஜிஆர் இளைஞர் அணி ஜெயமுருகன், மகளிர் அணி விஜயலட்சுமி. மாணவர் அணி ரகுபதி, இதய தெய்வம் அம்மா தொழிற்சங்க பேரவை அரவிந்த், வழக்கறிஞர் பிரிவு விஜயகுமார், சிறுபான்மை பிரிவு சாகுல்அமீது, விவசாயப் பிரிவு ரவிச்சந்திரன், மருத்துவர் அணி தியாகராஜன், மீனவர் அணி பழனி, இலக்கிய அணி சிங்கராஜன், அமைப்பு சாரா ஓட்டுநர்கள்அணி குமார் (எ) ராஜ்குமார், இளைஞர் பாசறை மகேஷ், இளம் பெண்கள் பாசறை அபிநதியா, தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு சிலம்பரசன், தகவல் தொழில் நுட்ப மகளிர் பிரிவு மஞ்சுளா, வர்த்தக அணி வஹாப், பொறியாளர் அணி ராஜா, ஆலந்தூர் பகுதிக்கு லட்சுமிபதி. சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி ராஜேந்திரன், ஒன்றிய கழக செயலாளர் பரங்கிமலை ஒன்றியம் காளிதாஸ்,
நகர கழக செயலாளர்கள் அனகாபுத்தூர் நகரம் பிரகாஷ், பம்மல் நகரம் ஜெயகோபி, தாம்பரம் நகரம் கிருஷ்ணமூர்த்தி, பல்லாவரம் நகரம் கோகுல்ராஜ், செம்பாக்கம் நகரம் சேகர், பேரூர் கழக செயலாளர்கள் பீர்க்கங்கரணை பேரூராட்சி சரவணன், பல்லாவரம் கண்டோன்மெண்ட் பேரூராட்சி மதியழகன், பெருங்களத்தூர் பேரூராட்சி கோபாலகிருஷ்ணன், சிட்லபாக்கம் பேரூராட்சி நந்தகுமார், மாடம்பாக்கம் பேரூராட்சி சங்கரநாராயணன், திருநீர்மலை பேரூராட்சி துரைபாண்டி ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு டிடிவி தினகரன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.